பக்கம்:சைவ சமய சாரம் 1944.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமரச நிலை

7


செப்பரிய சமயநெறி யெல்லாந் தந்தம்
தெய்வமே தெய்வமெனுஞ் செயற்கை யான
அப்பரிசா ளருமஃதே பிடித்தா விப்பால்
அடுத்த அந்நூல் களும்விரித்தே யனுமா னாதி
ஒப்பவிரித் துரைப்ப ரிங்ஙன் பொய்மெய் யென்ன
ஒன்றிலையொன்றெனப்பார்ப்ப தொவ்வா தார்க்கும்
இப்பரிசாஞ் சமயழமாய் அல்ல வாகி
யாதுசம யழம்வணங்கு மியல்ப தாகி.

இயல்பென்றுந் திரியாம லியம மாதி
எண்குணமுங் காட்டியன்பா லின்ப மாகிப்
பயனருளப் பொருள்கள்பரி வார மாகிப்
பண்புறவுஞ் சௌபான பட்சங் காட்டி
மயலறுமந் திரஞ்சிட்சை சோதி டாதி
மற்றங்க நூல்வணங்க மௌன மோலி
அயர்வறச்சென் னீயில்வைத்து ராசாங் கத்தில்
அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ

அந்தோஈ ததிசயமிச் சமயம் போலின்
றறிஞரெலாம் நடுவறிய அணிமா வாதி
வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம்
வைத்திருந்த மாதவர்க்கும் மற்று மற்றும்
இந்த்ராதி போகநலம் பெற்ற பேர்க்கும்
இதுவன்றித் தாயகம்வே றில்லை யில்லை
சந்தான கற்பகம்போ லருளைக் காட்டத்
தக்கநெறி இந்நெறியே தான்சன் மார்க்கம்.


சைவ சமய மேசமயம்
சமயா தீதப் பழம்பொருளைக்
கைவந் திடவே மன்றுள்வெளி
காட்டு மிந்தக் கருத்தைவிட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமய_சாரம்_1944.pdf/7&oldid=1628841" இலிருந்து மீள்விக்கப்பட்டது