பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ச. பிற்காலப் பல்லவர்காலத்தில் சைவ சமயம்-1

26. மானக் கஞ்சாறர்: அடியார்களின் குறிப்பறிந்து உணவு, உடை, பொருள் முதலியன கொடுத்தவர் மாவிரதியர் விருப்பின்படி மணமகளான தம் மகளது கூந்தலைப் பஞ்சவடிக்காக அறுத்துக் கொடுத்தவர்.' - ... •

27. முருக நாயனார்: பூசைக்குரிய மலர்மாலைகளைத் தொடுத்துக் கோயிலுக்கு உதவி வந்தவர் மடம் வைத்து அடியார்களை உபசரித்தவர்.' -

28. முனையடுவார். தோற்ற அரசர்கள் சார்பில் நின்று வெற்றி பெற்று அவர்கள் தந்த பணத்தைச் சிவனடியார்க்கு உதவி வந்தவர்.”

29. மூர்க்க நாயனார்: சொத்தையெல்லாம் அடியாரை உண்பிப்பதிலேயே செலவழித்தவர்; பிறகு சூதாடிப் பொருள் பெற்று அடியாரை உண்பித்தவர்."

30 மெய்ப்பொருள் நாயனார்: அடியார்க்கு வேண்டியன அளித்தவர்; தம் நாட்டுக் கோயில்களில் பூசை, ஆடல், பாடல் முதலியன குறைவின்றி நடக்க ஏற்பாடு செய்தவர்; அடியார்க்கு மட்டும் அடையாத வாயிலை உடையவர்."

31. விறல்மிண்டர் சேர நாட்டினர் தலயாத்திரை செய்தவர் அடியார்களை வழிபட்டவர்; திருவாரூரில் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடக் காரணமாயிருந்தவர்."

- 32. சுந்தரர். தமிழகம் முழுவதும் சுற்றித் தல யாத்திரை செய்து பதிகங்கள் பாடியவர்; கழற்சிங்கர், சேரமான் பெருமாள், பாண்டியன், சோழன் இவர்கட்கு நண்பர்."

இந்நாயன்மாருட் பலர் மாகேசுவர பூசை (அடியார்க்கு உணவளித்தல்) செய்தனர் என்பதைக் காண திருமூலர் கூறிய மாகேசுவர பூசையின் தேவையை இவர்கள் நன்குணர்ந்து கடைப்பிடித்தனர் என்பதை அறியலாம்.

நாயன்மார் வீட்டுப் பெண்மணிகளும் சமயத்தொண்டும்: திலகவதியார் திருவதிகைக் கோயிலில் சிவத்தொண்டு செய்து வந்தார். அப்பர் சமணத்திலிருந்து சைவராக உதவி செய்தவர் அவரேயாவர்.” நெடுமாறனைச்சைவராக்க மங்கையர்க்கரசியார்மேற்கொண்டமுயற்சி பெரிதாகும். சமணரான தம் கணவர்க்குத் தெரியாமல் அமைச்சரான குலச்சிறையைச்சம்பந்தரிடம் அனுப்பி, அவரைப்பாண்டிய நாட்டுக்கு வரச் செய்தார்; கணவரைத் தூண்டிச் சம்பந்தரைக் கொண்டு நோய் நீக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவரது முயற்சி இன்றேல் பாண்டிய நாட்டிற் சைவம் பரவியிராதென்பது உண்மை."காரைக் கால்