பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி -छा 1O5

இருவரும் சேர்ந்து சென்று பதிகம் பாடிய கோயில்கள் சில; அவர்கள் பாடிய பாக்கள் மக்கள் உள்ளங்களைக் கவர்ந்தன." 7.

அப்பர்-சம்பந்தருடன் அடியார் பலர் தல யாத்திரை செய்தனர். ஒவ்வோர் ஊராரும் அவர்களை எதிர்கொண்டழைத்து உபசரித்தனர். அக்காலத்தில் எல்லாத் தலங்களிலும் மடங்கள் இல்லை; திருவதிகை, திருநல்லூர், சீகாழி, திருப்புகலூர், திருக்கடவூர், திருமறைக்காடு, திருப்பூந்துருத்தி, திங்களுர், திருவாரூர், திருவீழிமிழலை, மதுரை, காஞ்சி, காளத்தி, சாத்தனூர், கொடுங்கோளுர், ஒற்றியூர் என்னும் ஊர்களில் மடங்கள் இருந்தன." அப்பரே திருப்பூந்துருத்தியில் மடத்தைக் கட்டினார்; அங்குப் பலநாள் தங்கிப் பதிகங்கள் பாடிக்கொண்டிருந்தார்.” மடங்கள் இல்லாத ஊர்களில் ஊர்ப் பொதுமக்கள் ஆதரவில் பல வீடுகளில் தங்கியிருந்தனர் அல்லது கோயிலில் தங்கியிருந்தனர் போலும் பல்லவராட்சியில் பல பெரிய கோயில்கள் நன்னிலையில் இருந்தமையால் கோயிற் செலவிலும் அவர்கள் தங்கியிருக்கலாம். இங்ங்னம் கோயிற் செலவிலும் ஊரார் செலவிலும் அப்பர்-சம்பந்தர் தல யாத்திரை வெற்றிகரமாக நடைபெற்றதென்னலாம். செங்காட்டங்குடி, திருப்புகலூர் முதலிய இடங்களில் அவர்கள் காலத்திலிருந்த சிறுத்தொண்டர், முருக நாயனார்போன்ற அடியார்களின் தொண்டு மிகுதியாக இருந்தது. தலந்தோறும் இருந்த அடியார்கள் தத்தம் ஊர்களில் சைவ சமயத்தைப் பரவச் செய்தனர். அவர்கள் முயற்சிக்கு உறுதுணையாக அப்பர்-சம்பந்தர் தலயாத்திரையும் பதிகமும் இருந்தன. நாடெங்கும் மக்கள் சைவ சமயத்திற் பற்றுள்ளம் கொள்ளலாயினர்.

இனிச் சமய வளர்ச்சிக்குக் கோயில்கள் எவ்வாறு உதவின என்பதைக் காண்போம். -

கோயில்கள்

கோயில் வளர்ச்சி: கண்ணப்பர் காலத்தில் காளத்திமலைமீது லிங்கம் இருந்தது. ஆனால் கோயிலோ, பாதுகாப்போ, கோயில் ஆட்சிமுறையோ இருந்ததாகத் தெரியவில்லை. அக்கடவுள் தனித்திருப்பதை எண்ணிக் கண்ணப்பரே வருந்தினார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவ்வாறே ஆலங்காடு போன்ற காடுகளிலும் கடம்பவனம் போன்ற வனங்களிலும் நெல்லிக்கா போன்ற சோலைகளிலும் மயிலாடுதுறை போன்ற நீர்த் துறைகளிலும் மக்கள் பிரயாணத்தில் தங்கும் இடங்களிலும் மரத்தடியில் லிங்கங்கள் இருந்திருத்தல் வேண்டும்; அவ்விடங்களில் நாளடைவில் அரசராலும் பிறராலும் கோயில்கள் ஏற்பட்டிருத்தல் வேண்டும்." மக்கள்