பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ச. பிற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம் - II

கோயில்களில் விழாக்கள்: ஆரூர், குறுக்கை, கோடிகா, தில்லை, மறைக்காடு, கோளிலி, மருகல், ஆமாத்தூர், புறம்பியம், ஆக்கூர், வலம்புரம், புத்தூர்," ஆவூர், மிழலை, கோலக்கா, செங்காட்டாங்குடி, நாகை, குற்றாலம், புகலி, மயிலை, களர், ஐயாறு, இடைமருதூர், திலதைப்பதி, கடவூர், அம்பர், தென்குடித்திட்டை, திருவான்மியூர், கச்சி, நல்லூர், நெல்வேலி, இடைவாய்,' நறையூர், கலயநல்லூர், வெஞ்சமாக்கூடல்' முதலிய ஊர்க்கோயில்களில் ஆதிரை, பூசம் முதலிய விழாக்கள் நிகழ்ந்தன. பெரிய ஊர்க் கோயில்களில் ஓர் ஆண்டில் பல விழாக்கள் நடைபெற்றன என்பது தெரிகிறது."ஆரூர், தில்லை, திருப்பத்தூர், திருவையாறு முதலிய ஊர்களில் தேர்விழாவும் நடைபெற்றது."

கோயில்களில் திருமேனிகளும் உருவச்சிலைகளும்: கோயில்களில் விழாக்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன என்பதால் கடவுளர் திருமேனிகள் இருந்தன என்பது பெறப்படும். அப்பர் - சம்பந்தர் - சுந்தரர் தமக்கு முற்பட்ட நாயன்மார்களைத் தங்கள் பதிகங்களிற் பாடியிருத்தலைக்காண, நாயன்மார் பிறந்து தொண்டு. செய்து மறைந்த ஊர்க் கோயில்களில் அவர்கள் உருவச்சிலைகள் எழுப்பிப் பூசை செய்யப்பெற்று வந்தன எனக்கோடல் பொருந்தும். இங்ங்னமே தேவாசிரிய மண்டபத்தில் சுந்தரர் தொகை பாடியபொழுது 50 நாயன்மார்கட்கும் உருவச்சிலைகள் இருந்தன எனக் கருதுதல் பொருத்தமாகும். - -

கோயில்களில் இசையும் நடனமும்: மகேந்திரன், இராசசிம்மன் போன்ற பல்லவர்கள் இவ்விரு கலைகளையும் நன்கு வளர்த்தார்கள் என்பது சென்ற அத்தியாயத்திற் கூறப்பட்டது. அவர்கள் காலத்தில் பல கோயில்களில் இக்கலைகள் வளர்க்கப்பட்டன என்பது திருமுறை களால் தெரிகிறது. ஆரூர்,திருமேற்றளி, ஆப்பாடி,ஆலங்காடு, நல்லூர், கடம்பூர், கோளிலி,' வீழிமிழலை, மருகல், ஆவூர், மயிலாடுதுறை, பெருந்துறை, சிரபுரம், நெடுங்களம், பூவணம், பல்லவனீசுவரம், பழனம், கானுர், இலம்பையங்கோட்டுர், சீகாழி, பாதாளிசுரம், ஐயாறு, வாஞ்சியம், நள்ளாறு, பழுவூர், சாய்க்காடு, புள்ளிருக்கு வேளுர், ஆமாத்தூர், திருக்களர், கோட்டாறு, பாசூர், நறையூர், புகலூர், ஏடகம், தென்குடித்திட்டை, கருகாவூர், வைகாவூர், மாகறல், தேவூர், மறைக்காடு, மாணிகுழி, பரிதிநியமம், இடைவாய், துறையூர், பனையூர், பைஞ்ஞ்லி, வெஞ்சமாக்கூடல், பனங்காட்டுர், பழையனூர் முதலிய ஊர்க் கோயில்களில் பண்ணோடுபாடல்கள் பாடப்பட்டன. கோயில்களில் இசை ஏன் பயிலப்படவேண்டும்?