பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ಇ 3

அக்கால அடியவர்கள் : அப்பர் காலத்தில் (1) விரிசடை விரதிகள், (2) அந்தணர், (3) சைவர்," (4) பாசுபதர், (5) காபாலிகர்,' (6) வித்தகக்கோல வெண்தலை மாலை விரதிகள் (மாவிரதிகள்), (7) சித்தர், (8) பித்தர் முதலியோர் தமிழகத்தில் இருந்தனர்." இவருள் (1) விரிசடைவிரதிகள் என்பவர் சடைவளர்த்துக்கொண்டிருந்ததுறவிகள் எனக் கூறலாம்; (2) அந்தணர் என்பவர் பிராமணத்துறவிகள் ஆகலாம்; (3) சைவர் என்பவர் அறுவகை உட்சமயங்களுள் ஒன்றான சைவத்தைச் சேர்ந்த துறவிகள் ஆகலாம், (4) பாசுபதர், (5) காபாலிகர் பற்றி முன்னரே கூறப்பெற்றது. (6) வெண்தலை மாலை விரதிகள் முன்னர்க்கூறப்பட்ட மாவிரதியர் ஆவர்; (7) சித்தர் என்பவர் இந்திரியங்களை அடக்கி அட்டமாசித்திகளில் வன்மை பெற்றவராவர்; (8) பித்தர் என்பவர் சிவநெறி ஒன்றிலேயே அழுந்திய உள்ளத்தினர்.

நாயன்மார் காலத்தில் இருந்தவராகப் பெரிய புராணம் கூறும் அடியார்கள் இவராவர் : (1) சிவயோகியர், (2) பிரமசாரி, (3) மாதவ வேடத்தார், (4) பைரவர். இவருள் சிவயோகியார் என்பவர் கோவணதாரி, நீறு பூசப்பெற்ற உடலினர் பரந்து சுருண்ட தலைமயிரினர் , திரிபுண்டரம் அணிந்த நெற்றியினர் கையில் திருவோட்டை உடையவர்." பிரமசாரி என்பவர் ஒற்றை ஆடையர் சிறுகுடுமியினர்; திரிபுண்டர நெற்றியினர்; மான்தோல் கட்டிய பூனூலினர்; பச்சைத் தருப்பைப் புல்லாலாகிய மோதிரம் அணிந்தவர் பூமுதலிய போகப் பொருள்களை விலக்கியவர்."மாதவ வேடத்தவர், திருநீறு, உருத்திராக்கம், சடைஇவற்றையுடைய திருக்கோலத்தவர்." பைரவர் என்பவர் சடை முடியினர்; கொன்றை, தும்பை மலர்களைச் சடையில் அணிந்தவர் நெற்றியில் பிறைபோன்ற பொட்டுடையவர்; சங்காலான காதணியுடையவர்; கழுத்தில் பளிங்கு மணிமாலை கட்டியவர்; கரிய சட்டை அணிந்தவர்; ருத்ராக்கத்தாலான பலவகை மாலைகளைக் கழுத்திலும் மார்பிலும் முன்கையிலும் தோளிலும் இடையிலும் கால்களிலும் தரித்தவர்; சிலம்பினைக் காலில் அணிந்தவர், இடக்கையால் மூவிலைச் சூலத்தை மார்பில் சாத்திப் பிடித்துக் கொண்டவர்; வலக்கையில் தமருகம் உடையவர்." இப்பல திறப்பட்ட சிவனடியார்கள் பல இடங்களில் இருந்த மடங்களில் இருந்துசைவத்தை வளர்த்தனர் எனக்கொள்ளலாம்.சிறந்த ஒழுக்கமும் நிறைந்த கல்வியும் உடைய சமயத் தலைவர்கள் இம்மடங்களி

ருந்தனர். மடங்களின் தோற்றத்தால் இந்து சமயம் ஒரு புதிய

}{}64

உயிரூட்டத்தைப் பெறத்தொடங்கிய தென்னலாம்.

நாயன்மார் காலத்தில் சுத்த சன்மார்க்க சைவம் வளரத் தொடங்கியதால் காபாலிகம், பாசுபதம், காளாமுகம், பைரவம், வாமம்

ഓക്ട1 - 8