பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ச பிற்காலப் பல்லவர்காலத்தில் சைவசமயம்-1

இறவாதகாதல் பெற விரும்பும் பக்தன், அன்பை அடிப்படையாகக் கொண்ட மெய்யடியாருடன் தொடர்ந்து பழகவேண்டும்' என்பது சைவ சித்தாந்தத்தின் சிறந்த கொள்கைகளுள் ஒன்று. இதனைச் சிவஞானபோதம் 12-ஆம் சூத்திரம் நன்கு வற்புறுத்துகிறது. மாணிக்க வாசகர் இத்தகைய அடியார் குழாத்தில் தம்மை வைக்குமாறு இறைவனை வேண்டுகிறார்." இவ்விரண்டும் திருவாசகத்தின் உயிர்நாடி என்று கூறலாம். ஆன்மாவாகிய தலைவன் கடவுளாகிய தலைவியைப் பல சோதனைப் படிகளைக் கடந்து கூடுதலே, திருக்கோவையார் என்னும் நூலிற் குறிக்கப்படும் பொருளாகும். பாக்கள் இனிமையும் பொருள் அழகும் உடையவை.

முடிவுரை * -

இது காறும் கண்ட பல செய்திகளிலிருந்து கீழ்வரும் உண்கைளை உணரலாம்: - - * 1. பிற்காலப் பல்லவ்ர் காலத்தில் ஏறத்தாழ 325 கோயில்கள் பாடல் பெற்றன என்பதிலிருந்து, இக்காலத்தில் பல கோயில்கள் புதியனவாக ஏற்பட்டன என்பது தெரிகிறது. . . . .

2. பல கோயில்களில் இசையும் நடனமும் வளர்க்கப்பட்டன. இசையும் நடனமும் வழிபாட்டுக்குச் சிறந்த உறுப்புக்களாகக் கருதப்பட்டன. - . - -

3. கோயில்களில் கடவுளர் திருமேனிகள் இருந்தன. சில கோயில்களில் அவ்வத்தலத்து நாயன்மார் உருவச்சிலைகள் இருந்தன. திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் மட்டும் சிவபதம் அடைந்த நாயன்மார் உருவச்சிலைகள் அனைத்தும் வைக்கப்பட்டிருந்தன. விழாக் காலங்களில் வீதி விடங்கரை அம்மண்டபத்தில் எழுந்தருளச் செய்வது வழக்கம். - •

4.சிலகோயில்களிலேனும் ஐப்பசி ஒணவிழா, கார்த்திகை விழா, ஆதிரை விழா, தைப்பூசம், மாசிமகம், பங்குனியுத்திரம் முதலிய விழாக்கள் நடைபெற்றன. சில கோயில்களிலேனும் தேர்கள் இருந்திருக்கலாம். விழாக் காலங்களில் கடவுளர் திருமேனிகள் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டன. . . . . . . . . . ."

5. செங்காட்டங்குடிபோன்ற சில ஊர்களில் சிறுத்தொண்டர் போன்ற தனியடியார் இருந்து சைவ சமயத்தை வளர்த்து வந்தனர். அவர்கள் தலயாத்திரை செய்துவந்த அப்பர் சம்பந்தர் போன்ற சமய குரவர்க்கு உதவி செய்தனர். சமய குரவர் யாத்திரையால் ஒவ்வோர் ஊரிலிருந்த மக்களும் சமய உணர்ச்சி பெற்றனர். பண்ணுடனும் பிற