பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சோழர்காலச் சைவ சமயம்

இருந்த சிவன்கோயில் மிக்க பழமையும் பெருமையும் உடையது. அது சித்தீச்சரம் எனப் பெயர் பெற்றது. பரமாரர் கல்வெட்டுக்களில் காணப்படும் சிவன் பெயர்களுள் பவாணிபதி, ஓங்காரதேவர் என்பனவே பலவாகக் காண்கின்றன. உச்சைனியில் இருந்த மகாகாளம் கோயில் மிக்க சிறப்புற்றது. கெளட தேசத்துச் சைவாசாரியர்கள் இராஜகுருமாராக இருந்தனர்."

சந்திராத்ரையர் (கி.பி. 830-1250). இவர்கள் பண்டில் கண்டை ஆண்டவர்கள்; சிறந்த சிவபக்தர்கள் தங்களைப் பரமமாகேசுவரர் என்று கூறிக்கொண்டவர்கள்; இம்மரபரசனான கீர்த்திவர்மன்காலத்திற்றான் (11-ஆம் நூற்றாண்டு) கிருஷ்ண மிஸ்ரா என்பவர் பிரயோத சந்திரோதயம் என்னும் சைவநூலைச் செய்தனர். இவ்வரசர்களின் பெயர்களுள் த்ரைலோக்கிய மல்லன், த்ரைலோக்கிய வர்மன் என்பன குறிக்கத்தக்கவை. இவர்கள் கல்வெட்டுக்களிற் பெரும்பாலானவை 'ஓம் நமசிவாய" என்பதையே தொடக்கமாகக் கொண்டவை. இவர்கள் நாட்டில் வைத்தியநாதர் கோயில், மரகதேசுவரர் கோயில் சிறப்புற்றவை; பின் குறித்த கோயிலில் பரண லிங்கமும் மரகத லிங்கமும் இருந்தன." - . . .

சாகமானர்கள் (கி.பி. 500-1200). இவர்கள் பஞ்சாப், இராசபுதனம், குசரத் பகுதிகளை ஆண்டவர்கள், சூரியனை வணங்கினார்கள்; எனினும் சிறந்த சிவபக்தர்கள். ருத்ராணி என்ற அரசி (கி.பி.12-ஆம் நூற்றாண்டில்) புஷ்கரம் என்ற ஆற்றங்கரையில் ஆயிரம் லிங்கங்களைத் தாபித்தாள்; அவள் மகன் கயிலாசம் போன்ற பெரிய சிவன் கோயிலைப் புஷ்கர நகரில் எடுப்பித்தான். இவர்கள் நாட்டில் புராணமகாதேவர் கோயில், சித்தீச்சரம், கபாலீசுவரர் கோயில் என்பன சிறப்புற்றவை. கோயில்களை அடுத்து மடங்கள் இருந்தன. அவற்றில்

லகுலீச பாசுபதத்துறவிகள் இருந்தனர். . ஹெய்ஹயர் (கி.பி. 250-1400). இவர்கள் நடுமாகாணத்தை யும் ஐக்கிய மாகாணத்தையும் ஆண்டார்கள். கார்த்தவீரிய அர்ச்சுனன் மரபினர்; சிலகாலம் சிற்றரசராயும் சிலகாலம் பேரரசராயும் இடம்விட்டு இடம் சென்று நாடு கண்டு ஆண்டவருமாவர். இவர்கள் பல பிரிவினராகி, வட இந்தியாவில் பல இடங்களை ஆண்டனர். இவருள் கங்கைக்கும் நருமதைக்கும் இடைப்பட்ட ஒன்பது லட்சம் கிராமங்களைக் கொண்டதாஹள நாட்டை ஆண்டவர் சிறந்தவராவர். அவர்கள் தலைநகர் திரிபுரீ என்பது. அவர்கள் ஆமர்த்தக மடத்துத் தலைவராக இருந்த துர்வாஸ்ஸ் என்னும் துறவியின் வழிவந்த சைவாசாரியர்களை ஆதரித்தன்ர்; அவர்களுக்கு மடங்களைக்