பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி శా 137

அமைந்தது. அத்திருச் சுற்றில் வலம் வரும் முறையில் தென்கிழக்கில் சூரியன், தென்மேற்கில் கணேசர், சப்த கன்னியர், மேற்கில் சுப்பிரமணியர், வடமேற்கில் ஜேஷ்டர், வடக்கே சண்டேசுவரர், வடகிழக்கில் சந்திரன் இடம் பெற்றிருந்தனர். இத்திருச்சுற்றுக் கோயில்கள் சில கோயில்களில் தனித்தும், மதிலை ஒட்டி அமைந்த கட்டத்திற்குள்ளும் இருந்தன. மதிலில் ஒன்றுமுதல்நான்குவாயில்கள் வரைகோயிலுக்கேற்றவாறு அமைந்தன. வாசல்மீது சிறிய கோபுரங்கள் அமைந்தன. இராஜராஜன் - இராஜேந்திரன் காலம்வரை கருவரைக்குமேல் உள்ள விமானமே வானளாவக் கட்டப்பட்டது. ஆயின், பிற்காலங்களில் விமானம் தாழ்த்தப்பட்டுக் கோபுரங்கள் உயர்த்தப்பட்டன. கோயிலைச் சுற்றிலும், சில இடங்களில் கோயிலுக்குள்ளும் நந்தவனங்கள் ஏற்பட்டன." அவ்வாறே திருக்குளங்களும், கவனிப்பு மிகுந்த கோயில்களில் இரண்டாம் திருச்சுற்றும் மூன்றாம் திருச்சுற்றும் கட்டப்பட்டன." அச்சுற்றுக்களில் அரசர்சிற்றரசர் முதலியோர் எடுப்பித்த சிறிய கோயில்கள் நாளடைவில் இடம்பெற்றன."திருவீரட்டானமுடையார்கோயிலுள்காலகாலதேவர், கூத்தாடுந்தேவர், குலோத்துங்க சோழிச்சுரமுடையார், விக்கிரம சோழீச்சுரமுடையார்கோவில்கள் இருந்தன என்று ஒரு கல்வெட்டு(40 of 1905) அறிவிக்கிறது. -

பல்லவர் காலத்தும் முற்காலச் சோழர் காலத்தும் அம்மனுக்குச் சிவன் கோயிலில் தனிக்கோயில் ஏற்படவில்லை; அம்மன் இறைவன் சந்நிதியிலேயே போகசக்தி அம்மன் எனத் தனி இடம்பெற்றிருந்தாள். இராசராசன் இப்போக சக்தி அம்மனை உமாபரமேசுவரி என்று குறிப்பிட்டான். கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் முதல் இராசேந்திரனது எண்ணாயிரம்கல்வெட்டேமுதல்முதல்ாக அம்மன்தனிக்கோயிலைப் பற்றித் திருச்சுற்றாலையில் உள்ள பரிவார ஆலயங்களைப் பற்றிக் கூறுமிடத்துக் குறிக்கிறது. அதன்பிறகே அம்மனுக்குத் தனிக் கோயில்கள் எடுக்கப்பட்டன." சோழர் ஆட்சிமுடியப் பல கோவில்களில் அம்மன் கோயில்கள் புதியனவாக ஏற்பட்டன என்பதைப் பல கல்வெட்டுக்கள் குறிக்கின்றன." - கோயில்கள் செல்வாக்கிற் பெருகப் பெருக, அவற்றுள் பல மண்டபங்கள் ஏற்பட்டன. செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டநம்பி மண்டபம், திருவெற்றியூரில் இருந்த வக்காணிக்கும் மண்டபம், 'மண்ணைக் கொண்டசோழன், இராஜராஜன்,'இராஜேந்திரன் என்ற பெயர்களைக் கொண்டமண்டபங்கள், வியாகர்ணதான-வியாக்யான மண்டபம் என்பன குறிக்கத்தக்கன. பின்னது.இலக்கணம் கற்பிக்க ஏற்பட்ட மண்டபமாகும். நடன மண்டபம்,' நாடகமண்டபம்,' திருப்பதியம் பாடவும் எழுதவும் பயன்பட்ட திருக்கைக் கோட்டி