பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ன் சோழர்காலச் சைவ சமயம்

கல்வெட்டுக்களிற் காண்கின்றன." இந்த அதிகாரிகள், கோயில் கணப் பெருமக்கள், ஊரவையார் என்பவர் முன்னிலையில் கோயில் நகைகளைக் கணக்கிட்டு, மதிப்பிட்டுக் குறித்துக் கொண்டனர்;' கோவில் கணக்குகளைப் பார்வையிட்டனர்; கோயில் பணத்தைக் கையாண்டவர் - சொன்னபடி கோயிலுக்கு நெல் முதலியவற்றைக் கொடுக்கத் தவறிய குத்தகையாளர் இவர்தம் நிலங்களை- வீடுகளைப் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் சிவத்துரோகிகள், ஊர்த்துரோகி கள் என்று ஏசப்பட்டனர்." *; . . .

எளிய கோயில்கள் கவனிக்கப்பட்ட முறை : இராமநதீச்சுரம் கருங்கல் திருப்பணியற்றது. அது முதற் குலோத்துங்கன் காலத்திலும் செங்கற்களாலேயே புதுப்பிக்கப்பட்டது. அதனால் அதற்குரிய பத்திரங்கள் திருச்செங்காட்டங்குடிக் கோயிற் சுவரில் வெட்டப்பட்டன. பிறகு பூசை முதலியன நடைபெற இரண்டாம் குலோத்துங்கன் நிலமளித்தான்." பிறகு மூன்றாம் இராசராசன் காலத்தில் கோயில் பூசைக்கு முட்டுப்பாடு ஏற்பட்டதால் கோயில் மாகேசுவரரும் தானத்தாரும் சிதம்பரம் கோயில் ஆட்சியாளரை (மாகேசுவரரை)ச் சந்தித்து உதவி கேட்டனர். அவர்கள் அவை கூட்டி, சேர, சோழ, பாண்டிய, சயங்கொண்ட சோழ மண்டலங்களில் உள்ள குறிப்பிட்டகோயிற் பணியாட்கள்முன்போலவே ஆளுக்கு ஆண்டுக்கு 20 காசு வீதம் கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்தனர்; சூலப்பொறி பொறிக்கப் பெற்றவரும் 20 காசு ஆண்டுக்குச் செலுத்த வேண்டும்; பிற சிற்றுர்களில் உள்ள மாகேசுவரரும் பிராமணரும் (பொதுவாக) பத்துக் காசு செலுத்தவேண்டும். இங்ங்ணம் செலுத்தப் பெறும் பணம் கொண்டு கோயிலைப் பழுது பார்க்கக் கடவர் என்றும் முடிவு செய்தனர்." ‘. . . . .

இத்தீர்மானத்திலிருந்து நாம் அறியத்தகுவன இரண்டு : (1) எளிய கோயில்கள் பொருள் உதவி பெற்ற முறை; (2) தில்லை மாகேசுவரர்க்கு அக்காலத் தமிழகக் கோயில்களில் இருந்த செல்வாக்கு." - - -

- முன் சொன்ன திட்டமான கோயில் ஆட்சியில் பொதுமக்கட்கு நம்பிக்கை ஏற்பட ஏற்பட, அவர்கள் கோயில்கட்கு மிகுதியாக நிபந்தங்கள் விடுத்தனர்; கோயில்கள் செல்வவளத்திற் பெருகின; பக்தர்களின் அறங்கள் குறைவின்றி நடந்தன. கோயில் பரிவாரத்தார். தத்தம் கடமையான தொழில்களைச் செவ்வனே செய்தனர். கோயில் களில் சமயத் தொடர்பான ஆடல் - பாடல் - நாடகம் - திருமுறை முதலியன ஒதல் - சமயபோதனை என்பன காலந்தவறாது நடை பெற்றன.இவை பற்றிய விவரங்களை அடுத்த பகுதியிற் காணலாம்.