பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கோயில்கள்-மடங்கள்: சமய நிகழ்ச்சிகள்

கோயில்களில் சிற்பங்கள்

சோழர்காலச் சிற்பிகளின் வேலைத்திறனை உணர்த்த வல்ல கோயில்கள் தஞ்சை-இராசராசேசுவரம், கங்கை கொண்ட சோழேசுவரம், இராசராசபுரம் இராசராசேசுவரம், திருபுவன வீரேசுவரம் என்பன. இக்கோயில்களில் உள்ள பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீசர், குலதேவர், கலியாணசுந்தரர், மகிஷாசுரமர்த்தினி, திருமால், பிரமன் முதலியவர்களை உணர்த்தும் சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பனவாகும். இவற்றைப் பார்க்கும் மக்கள் இவற்றின் வேலைப்பாட்டைவியப்பதுடன், இவை கடவுளரின் பல்வேறு நிலைகளை உணர்த்தும் அறிகுறிகள் என்று கருதிச் சமய அறிவு பெறுதல் இயற்கை உருவம் உள்ளத்திற் பதிகின்றது போல அருவம் பதிவதில்லை அல்லவா. ஆதலின் மக்கட்குச் சமயப்பற்றையும் அறிவையும் உண்டாக்கச் சமயத் தொடர்பான சிற்பங்களும் ஓவியங்களும் உலோகத்திருமேனிகளும் கோயில்களில் தேவைப்பட்டன. தாராசுரத்தில் கடவுளர்சிற்பங்கள்.

சுவாமி கோயில் கோபுரத்தின் அடிப்பகுதியில் பல புரைகள் காலியாக உள்ளன. அவற்றின்மேல் கல்வெட்டெழுத்துக் காணப் படுகிறது. அப்பெயர்களைக்கான, அப்பெயர்களைக்கொண்ட திரு வுருவங்கள் அங்கு இருந்தன என்பது தெளிவு.அப்பெயர்கள் வருமாறு: (1) ஆதிசண்டேசுவரர், (2) கங்காதேவி, (3) மகாசாஸ்தா, (4) ருத்ராணி, (5)வைஷ்ணவி, (6) பிரம்மரணி, (7) ரீநந்திகேசுவரதேவர், (8) பெரியதேவர், (9) சரந்தியாதித சக்தி, (10) சாந்திசக்தி, (11) வித்யாசக்தி, (12)பிரதிஷ்டாசக்தி, (13) நிர்விருத்தி சக்தி, (14) ரீதேவி, (15) துர்க்கா தேவி, (16) பத்மநிதி, (17) சூரியதேவர், (18) சுப்பிரமணியதேவர், (19) க்ஷேத்திரபாலர், (20) சரசுவதி, (21) ஈசானதேவர். இவை தனித்தனி உருவச்சிலைகள் ஆதலின்,

சைவ - 10