பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ச கோயில்கள் மடங்கள்- சமயநிகழ்ச்சிகள்

பிறரால் எடுத்துச்செல்லப்பட்டனபோலும் இவற்றைக்கண்டுகளிக்க நாம் பேறு பெறவில்லை. ஆயினும் இவை சோழர்கால மக்களை இன்புறுத்தியிருக்குமென்பதில் ஐயமில்லை.

கங்கைகொண்ட சோழபுரச்சிற்பங்கள்

தமிழ்நாட்டில் இன்று பழுதுபட்டுள்ள கோயில்களில் கங்கைகொண்ட சோழேச்சரம் ஒன்று. ஆயினும் அதன் சிற்பங்கள் இன்று செய்தாற்போலப் பேரழகுடன் காண்கின்றன. அவற்றுள் குறிக்கத்தக்கது விசாரசருமர் சண்டீசப்பதம் பெற்றதை விளக்கும் சிற்பமாகும். சிவன் உமாதேவியுடன் இருந்து விசாரசருமர் முடியிற். கொன்றைமாலையைச் சூட்டி அவருக்குச் சண்டீசப்பதம் (சிவன் கோயில் சொத்துக்களைக் கண்காணிக்கும் முக்கிய அதிகாரி என்னும் பதவி) கொடுக்கும் காட்சியைக் குறிப்பது. அதற்கு வலப்புறம் கணநாதர் ஆடிப்பாடிக்களிப்பதும், இடப்புறம் பசுக்கள் (வேதங்களைக் குறிப்பன போலும்!) நிற்றலும் காட்டப்பட்டுள்ளன. நடு மண்டபச் சுவரிலும் சண்டீசர் வரலாறு நான்கு வரிசைகளில் செதுக்கப் பட்டுள்ளதால், இக்கோயிலைக் கட்டிய முதலாம் இராசேந்திரன் காலத்திற்றான் இச்சிற்பங்களும் செதுக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனக் கருதுதல் தவறாகாது. இவற்றுள் மேற்சொன்ன பெருஞ்சிற்பம், பின்வந்த சேக்கிழார் உள்ளத்தைக் கவர்ந்தது. அவர் இதற்கு விளக்கம் என்று சொல்லும் முன்றையில் இரண்டு செய்யுட்களைச் சண்டீசர் வரலாற்றிற் பாடியுள்ளார். இவ்வழகிய சிற்பம் சோழர்கால மக்கட்குச் சண்டீசர் வரலாற்றை உணர்த்திப் பக்தியின் சிறப்பை நன்கு பதியச் செய்திருக்கும் அன்றோ? -

கீழைக் கடம்பூர்ச்சிற்பங்கள்

'கடம்பூர்-இளங்கோயில் என்று அப்பராற் பாடப்பட்டகோயில் இன்று அழிந்து கிடக்கிறது. அதன் கருவறையின் மூன்றுபுறச் சுவர்களிலும் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்த புரைகள் வெட்டப்பட்டுள. ஆயின் அவற்றில் சிலைகள் இல்லை. புரைகளின் கீழே, அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளின் பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றுள் அழிந்தனபோக இன்று படிக்கத் தக்கனவாயுள்ள சில. அவை, (1) ஆனை உரித்த தேவர், (2) லிங்க புராணதேவர், (3) சந்திரசேகரதேவர், (4) சந்தியா நிருத்ததேவர், (5) கால்காலதேவர், (6) அர்த்தநாரீசதேவர், (7) ஆனையாண்டதேவர் (கணபதி?), (8) அறுவர் அமுதை ஆண்டார் (சுப்பிரமணியர்), (9) உலகாண்ட மூர்த்தி, (மூர்த்திநாயனார்) (10) முருகாண்டார்,