பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ఇక్షా 13

என்பன வரலாறு கண்ட உண்மை. ஏறத்தாழக் கி.பி.575 முதல் 900 வரை அவர்தம் பேரரசு கிருஷ்ணை முதல் காவிரி வரை பரவியிருந்தது. இங்ங்ணம் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் இருந்த பல்லவரைப்பற்றி மிகப் பழைய தமிழ் நூல்கள் என்று கருதப்படும் தொல்காப்பியம், புறநானூறு முதலிய எட்டுத் தொகை, முத்துப்பாட்டு என்பனவற்றில் ஒரு குறிப்பும் காணப்படவில்லை." சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் இரண்டு காவியங்களும் காஞ்சியைப் பற்றிப் பல இடங்களில் குறித்தாலும், பல்லவ அரசர் ஒருவரைப் பற்றியேனும் குறிப்பிடாதது கவனிக்கத் தக்கது. ஆதலின் அவை இரண்டும் பல்லவர்க்கு முற்பட்ட நூல்கள் ஆகும். எனவே, மேற்சொன்ன தமிழ் நூல்கள் அனைத்தும் கி.பி. 300க்கு முற்பட்டனவாகக் கொள்ளலாம். இனி அந் நூல்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் குறிப்புகளைக் காண்போம்.

தொல்காப்பியம்

பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில், முருகன் மலைநாட்டவராலும், திருமால் காட்டுநில மக்களாலும் வழிபடப்பட்டனர் என்னும் செய்தி காணப்படுகிறது." கொற்றவை வழிபாடும் இருந்ததாகத் தெரிகிறது. ஆயின், சிவனைப் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் வெளிப்படையாகக் காணப்படவில்லை. 'தெய்வங்கட்குரிய படிமைகளை (Images)க் காக்கப் பிரிவு கூறப்பட்டுள்ளது. தெய்வங்கட்குப் பூசையும் விழாக்களும் நடைபெற்றன' என்று தொல்காப்பிய உரையாசிரியருள் காலத்தாற் முற்பட்ட இளம்பூரணர் கூறுவதால், தொல்காப்பியர் காலத்தில் கோயில்கள்-விக்கிரகங்கள்-அவற்றுக்குப் பூசை விழாக்கள் என்பன இருந்தன என்பது தெரிகிறது. தொகை நூல்களிற் சிவனைக் குறிக்கும் பெயர்கள்

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் தொகை நூல்களில், 'சிவன்' என்னும் பெயர் காணப்படவில்லை. ஆயின், அக் கடவுள்-தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோன், முக்கட்செல்வன், கறைமிடற்று அண்ணல், நீலமணிமிடற்று. அண்ணல், முதுமுதல்வன்," நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன், மழைதலை வைத்தவர்," காய்கடவுள், பைங்கட் பார்ப்பான், புங்கம் ஊர்பவன், மறுமிடற்று அண்ணல், சலதாரி," முக்கணான், ஈர்ஞ்சடைஅந்தணன், ஆலமர் செல்வன், கணிச்சியோன்" முதலிய பல பெயர்களாற் குறிக்கப்பட்டுள்ளான். -

{