பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6ኝ)ረቻ6ጪ! &ffዚዕ{ዚ ! வளர்ச்சி ങു. 153

தமிழகத்துக் கோயில்களைக் காணவும் விழாக்களைத் தரிசிக்கவும் காஷ்மீரம் முதலிய வட நாடுகளிலிருந்தும் யாத்ரிகர் வந்தனர் என்பதைக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.”

ஆடலும் பாடலும்

குறிப்பிட்டநாட்களிலும் விழாக்காலங்களிலும் ஊர்வலத்திலும் ஆடல்பாடல்கள் நிகழ்ந்தன. இராசராசன் தான் கட்டிய பெரிய கோயிலில், தமிழ் நாடு முழுவதிலும் இருந்த பல கோயில்களிலிருந்து ஆடல்-பாடல்களில் வல்லநானூறு பேரை ஆடல் பாடல்கள் நிகழ்த்த வரவழைத்தான் எனின், அவன் காலத்திலேயேகோயில்களில் ஆடலும் பாடலும் உயரிய நிலையில் இருந்தன என்பதை நன்கு அறியலாம்." சோழர் காலத்தில் பெரும்பாலான கோயில்களில் ஆடலும் பாடலும் வல்ல பெண்கள் இருந்தனர் என்பதைப் பல கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. கோயில்களில் தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து, சாக்கைக் கூத்து, சாந்திக் கூத்து என்பன ஆடப்பட்டன." நடனக்கலை ஆசிரியர் கூத்தரசன், நிருத்தப்பேரரையன், நட்டுவ ஆசான் எனப் பலவாறு பெயர் பெற்றனர்." அவர்கள் பெற்றிருந்த காணி கூத்தக்காணி, நட்டுவக் காணி, எனப்பட்டன." திருவிடைமருதூரில் தளியிலார்க்கும் தேவரடியார்க்கும் பாட்டுக் கற்பிக்கப் பாணன் இருந்தான். அவன் பெற்றிருந்த காணி பாணப் பேறு எனப்பட்டது." முதலாம் இராசராசன் திருநீலகண்ட யாழ்ப்பாணரது மரபில் வந்த பாணரைக் கொண்டு திருப்பதிகங்கட்குப் பண் வகுக்கச் செய்தான்' என்பதையும் காண, சோழர்காலத்தில் பாணர் இருந்துதமிழ் இசையை வளர்த்து வந்தனர் என்பது தெரிகிறது. திருவொற்றியூர்க் கோயிலில் பதியிலார் சொக்கம், சந்திக் குணிப்பம் என்பவற்றை ஆடிக்காட்டும் பொழுது ரிஷபத்தளியிலார் வாய்ப்பாட்டுப் பாடினர். பின்னவர் வரிக்கோலமும் அகமார்க்கமும் ஆடிக் காட்டினர். பதியில்ார் சில குறிப்பிட்ட திருப்பதியம், திருவெம்பாவைப் பாக்களை நடிப்பின் வாயிலாக வெளிப்படுத்தியதோடு பல பாக்களையும்பாடினர். இவர்கள் நடித்தவற்றுள் சந்திக்குணிப்பம், இடவு, மலைவு, அகமார்க்கம், செந்தூக்கு என்பன குறிப்பிடத்தக்கவை. இவை இன்னவை என்பது இப்பொழுது விளங்கவில்லை." இவ்விவரங்களால் திருமுறைப் பாக்கள் இசையுடனும் நடனத்துடனும் பயிலப்பட்டன என்பதை அறியலாம். ஆடலிலும் பாடலிலும் நன்முறையிற்பயிற்சிபெற்ற இந்த இசைவாணிகள் சமயத் தொடர்பான பாக்களைப் பாடி, அவற்றை நடனத்திலும் அமைத்துக் காட்டினமை மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கலாம். மேலும் மக்கள் உள்ளங்களில்