பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி - 159

திருநாவுக்கரசு ஆளுடைய அரசு என்றும், திருஞானசம்பந்தர் 'ஆளுடைய பிள்ளையார் என்றும் வழங்கப்பெற்றவாறே, சுந்தரர் 'ஆளுடைய நம்பி எனப்பட்டார். ஆளுடை நம்பி - திருத்தொண்டர் (சுந்தரரர்). ரீ-திரு. ஆளுடை நம்பி ரீ புராணம் என்பதைத் திருத் தொண்டர் திருப்புராணம் என்றும் கூறலாம். இவ்வழக்குத் 'திருமுருகன் திருமடம்' என்றாற்போன்றது. எனவே, சேக்கிழார் தந்த திருத்தொண்டர் புராணம் என்ற நூலே ஆளுடை நம்பி ரீ புராணம் என்று பின்னர் வழக்குப் பெற்றதென்னலாம். மேற்கூறிய கல்வெட்டின் காலம் சேக்கிழார்க்கு ஏறத்தாழ 20 அல்லது 25 ஆண்டுகள் பிற்பட்டதே ஆதலாலும், சுந்தரரைப்பற்றிய வேறு தனி நூல் ஒன்று அக்காலத்தில் தமிழிலோ - வடமொழியிலோ வழங்கியதாகச் சான்று இன்மை யாலும்," ஒற்றியூர்க் கோயிலிற் படிக்கப்பெற்றது, சேக்கிழார் இயற்றிய பெரிய புராணமே எனக்கோடல் பொருந்துவதாகும். .