பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ச மடங்களும் குகைகளும்

காளாமுகர் வட இந்தியாவிலும் டெக்கானிலும் பரவிப் பல மடங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றுள் கோமடம் என்பது ஒன்று. அம்மடத்துறவிகளான சைவராசி, ஞானராசி என்ற பண்டிதர்கள் செங்கற்பட்டை அடுத்த களத்தூர்க் கோயில், ஆலக்கோயில் என்ற கோயில்களை அடுத்து மடங்களைக் கட்டி வாழலாயினர். பரஞ்சோதி -பண்டிதர் என்ற மற்றொருகாளாமுகத்துறவியின்சிலை ஆலக்கோயிற் சுவரில் இருக்கிறது. திருவலஞ்சுழியிலும் பந்தனை நல்லூரிலும் கோமடத்துத் துறவிகள் இருந்து சைவ சமயப் பணிசெய்து வந்தனர்.

காபாலிகர் மடம் : திருவொற்றியூரில் காராண்ை வியங்கர் இருந்ததால், அங்குக் காளாமுகர் செல்வாக்கு இருந்தது என்பது முன்பு கூறப்பட்டது. ஆயின், அக்கோயிலில் சோழர் காலத்தில் காபாலிகர் செல்வாக்கு மிகுந்திருந்ததைக் கல்வெட்டுக்களிற் காண்கிறோம். கன்னரதேவன் காலத்தில் (950, கி.பி.) சேரநாட்டுச் சிற்றரசர் மரபில் வந்த ஒருவர் நிரஞ்சன் குரவர் என்பவரிடம் உபதேசம் பெற்றுச் சதுரானன - பண்டிதர் என்ற பெயருடன் திருவொற்றியூரில் மடத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவர் இராஜாதித்தன் கன்னர - தேவன் இவர்களிடம் செல்வாக்கு மிகுந்தவர். அவருக்குப் பின்வந்த மடத்துத் தலைவர் அனைவரும் 'சதுரானன பண்டிதர்' என்றே. பெயர் பெற்றனர். அவர்கள் மடத்து ஆட்சியிற்பங்குகொண்டனர்.இரண்டாம் இராசாதிராசன் முன் சொல்லப்பட்ட ஆளுடைய நம்பி ரீ புராணம் கேட்டபோதுசதுரானன-பண்டிதரும்,காபாலிகாது.சோமசித்தாந்தத்தை எடுத்துரைக்கும் வாகீச பண்டிதரும் உடன் இருந்தனர் என்று கல்வெட்டுக் கூறுகிறது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணமிஸ்ரரால் எழுதப்பெற்ற பிரபோத சந்திரோதயம் என்ற தத்துவ நாடக நூலில் காபாலிகன் காட்சியளிக்கிறான். அவன் மனித

எலும்புகளாலான மாலைய அணிந்தவன் - சுடுகாட்டில் வாழ்டிவன் . மண்டையோட்டில் உணவு உண்பவன் - பல வகை மந்திர மாயங்களில் வல்லவன் - இவ்வாறு அவன் நாடகத்தில் அறிமுகப் படுத்தப்படுகிறான். காபாலிகர் நரபலியிட்டுப் பைரவக் கடவுளை வணங்குபவர் குடித்தல், சோரம்போதல் பழக்கங்களாகவுடையவர். சோமசித்தாந்தம் ஒருவகைச் சக்தி வணக்கத்தைத் தன்னகத்தே கொண்டதாகலாம். இக்காபாலிகர் சேர்க்கையாற்றான் அங்குள்ள துர்க்கைக்கு மதுவும் ஊனும் படைக்கப்பட்டு வந்தன. அப்பழக்கம் சமீபகாலம் வரை தொடர்ந்து நடந்து வந்தது என்பது நன்கு புலனாகிறது." . . . . . . . . x - . . . . .