பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 ச மடங்களும் குகைகளும்

தேவர் ஒருவர்." இவ்வாசிரியர் மடங்கள் பாண்டி மன்னர்களால் ஆதரிக்கப்பெற்றவை. -

திருச்செந்தூர்த்தாலுகாவில் உள்ள ஆற்றுரில் கி.பி.1250-இல் கோளகி - மடம் இருந்தது. அவ்வூர்க் கோயிலில் திரு ஞானத்தைப் பாடத் தென்மடங்கள் பலவற்றிலிருந்து பதினொரு சீடர்கள் நியமனம் பெற்றிருந்தனர். அப்பல மடங்களில் தலைவர்கள் பல சந்தானங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விஷகண்ட தேவர் சந்தானத்தைச் சேர்ந்த எல்லையில்லாதேவர், பட்ட வீர சந்தானத்தைச் சேர்ந்த மகாதேவர்,திருவாரூர் மடத்தைச் சேர்ந்த சிவபாதயிருதயர், அஸ்திரதேவர், பிட்சாமட சந்தானத்தைச் சேர்ந்த இராவளர் - பசுபதி தேவர், மதுரை மடத்தைச் சேர்ந்த நீலகண்டதேவர், திருநெல்வேலி - அழகிய நாயக சந்தானத்தைச் சேர்ந்த உய்யக்கொண்ட தேவர், திருநெல்வேலி மடத்தைச் சேர்ந்த அணுக்க வன்றொண்டர் என்பவராவர். இவ்விவரங்களிலிருந்து, கோளகி மடங்கள் பல சந்தானங்களை உடையவை என்பதும், திருவாரூர், மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் கோளகி மடங்கள் இருந்தன என்பதும், பிசஷாமடமும் கோளகி - மடத்தைச் சேர்ந்ததே என்பதும் அறியலாம். *... ."

திருஞானம் என்பது எதுபற்றிப் பேசுவது, அதன் ஆசிரியர் யாவர் என்பன போன்ற செய்திகள் அறியக் கூடவில்லை. ஆயினும், அது சமயச் சிறப்புடைய நூலாகும் என்பதில் ஐயமில்லை." - கோளகி மடத்தைச் சேர்ந்த விசுவேசுர - சம்பு தட்சினத்தில் ஏற்படுத்திய மடத்தைப் பற்றிய விவரங்களை அறியின், தமிழகத்தில் இருந்த அச்சார்புடைய மடங்கள் இந்நிலையில் இருந்திருத்தல் கூடும் என்பதை ஒருவாறு உணரலாம். அவர் மந்தரம் என்ற இடத்தில் விசுவேசுவரர்க்குக் கோவில் எடுப்பித்தார்; சைவமடத்தையும், மருத்துவ விடுதியையும், உணவுச்சாலையையும் அமைத்தார்; பிராமணர் பலரைக் குடியேற்றினார். அவ்விடத்திற்கு விசுவேசுவர கோளகி என்று பெயரிட்டார். அவ்விடத்தில் (ஊரிலும் மடத்திலும்) இருந்தவர் இவராவர்:- முதல் மூன்று வேதங்களையும் கற்பிக்க ஆசிரியர் மூவர், இலக்கியம், ஆகமம், தர்க்கம் ஆகியவற்றைக் கற்பிக்க ஆசிரியர் ஐவர், மருத்துவர் ஒருவர், கணக்கர் ஒருவர், கோயிற்பணிகளைக் கவனிக்க நடனமாதர் பதின்மர், மேளம் முதலிய வாத்தியக்காரர் எண்மர், காஷ்மீரப் பாடகன் ஒருவன், பாடுமகளிர் பதினான்குபேர், ஆடுமகளிர்அறுவர், பார்ப்பணசமையற்காரர்.இருவர், பணிமக்கள் நால்வர், மடத்திலும், உணவுச் சாலையிலும் வேலை