பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ಉಕಖ சமய வளர்ச்சி -ు 177

திருத்துறைப்பூண்டியில் மட்டும்.நடந்ததா, நாடுமுழுவதுமே நடந்ததா என்பன தெரியவில்லை. ஆனால் மூன்றாம் குலோத்துங்கற்குப் பிற்பட்ட காலத்திற்றான் குகைகள் மிகுதிப்பட்டன என்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது.

'முன் சொன்ன மடங்களும் இக்குகைகளும் பொதுக் கல்வியையும் சமயக்கல்வியையும் வளர்க்கப் பாடுபட்டன. திருப்பதிகம் ஓதுவாரைத் தயாரித்தலும் இவற்றின் கொள்கைகளிற் சிறந்ததாகும்." - - - மக்கள்கொண்ட நாயன்மார் பெயர்கள்::

பல்லவர் காலத்தில் சைவத்தொண்டு செய்து மறைந்த நாயன்மார்களின் வரலாறுகள் - சோழர்காலத்தில் திருத்தொண்டத் _தொகை, நம்பியாண்டார்நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி, சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம், சைவத்திருமுறைகள் இவற்றால் நாட்டில் நன்கு பரவின. பல கோயில்களில் நாயன்மார் உருவச் சிலைகள் பூசிக்கப்பட்டன; விழாக்கள் நடைபெற்றன. இவற்றால் பொதுமக்கள் நாயன்மார்களின் பெயர்களையும் வரலாறுகளையும் நன்கறிந்திருந்தனர் என்பதும், அப்பெருமக்கள் பெயர்களைத் தாங்கள் தாங்கி மகிழ்ந்தனர் என்பதும் பல கல்வெட்டுக்களால் அறியப்படும் செய்தியாகும். இடமஞ்சி இங்குச் சில பெயர்களை மட்டும் குறிப்போம்.அப்பெயர்கள் அரசாங்க அலுவலர் முதல் சாதாரண மக்கள் வரையிற் கொண்டிருந்த பெயர்கள் ஆகும்.

1. அழகன் ஞானசம்பந்தன் 216 of 1912 2. புகலிவேந்தன் 97 of 1916 3. பரசமயகோளி மாமுனி S.I.I.7. 752 4. வாகீசர் 98 of 1926 5. திருவெண்காட்டுநங்கை 412 of 1922 6. மூர்க்கன் ஐயாறன் - S.I.I.2.94 7. பரவை நங்கையார் 880 of 1917 8. பவைநங்கை ਾਂ வன்தொண்டத்திாதி 520 of1921 9. கண்ணப்பன் - . S.I.I.5,468 10. பூதிமாதேவடிகள் (கன்னரதேவன் மனைவி) 356 of 1903 11. புகழ்த்துணை அடிகள் 168 of 1904

சைவ - 12