பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 - சோழர்காலச் 65ು இலக்கியம்

அன்று; அவர்க்கு முன்னர் ஏறத்தாழக் கி.பி. 300 முதல் 900 வரை இருந்த நாயன்மார்களைப் பற்றிய வரலாறு. நாயன்மாரோ, வடக்கே காம்பிலியிலிருந்து தெற்கே மதுரை வரையிற் பல நாடுகளில் வாழ்ந்தவராவர் - பல காலங்களிற் பரந்துபட்டு வாழ்ந்தவராவர். பலசாதியார் ஆவர். அப்பெருமக்களுடைய பிறப்பிடம், சாதி, செய்த சமயத்தொண்டுமுதலியசெய்திகளைத்திருமுறைகளைமட்டும்நம்பி எடுக்காமல், தாமும் நன்கு விசாரித்து, பல இடங்கட்கும் நேரிற்சென்று ஆராய்ந்து யாவற்றையும் திரட்டிக்கொண்டபிறகே நூல் பாடினார் எனக் கருத அவர் நூலிற் பல சான்றுகள் உள." அப்பர் புராணத்தில் குணபர ஈசுவரத்தையும் சிறுத்தொண்டர் புராணத்தில் வாதாபிப் படையெடுப்பையும் அவர் கூறியிராவிடில், இன்று அப்பர்-சம்பந்தர் காலத்தை அறியவேறுவழியில்லை.சேக்கிழார் சிறந்த சைவர் பெரும் புலவர் இவற்றுடன் சோழப் பெருநாட்டின் முதலமைச்சர் ஆதலின், அவரது காவியத்தில் இலக்கிய நயம் - வரலாற்று உண்மைகள் - சைவ சித்தாந்தக் கருத்துக்கள் என்பன அங்கங்கே மிளிர்கின்றன. -

சங்ககாலத்திற்குப்பிறகுதமிழராய சோழராட்சியில் தமிழ்நாட்டு நாயன்மாரைப் பற்றித் தமிழர் பாடிய தமிழ்க்காவியம் இஃது ஒன்றே என்பது கவனிக்கத்தக்கது. இதன்கண் பிராமணர் முதல் பறையர் ஈறாகவுள்ள பல சாதிமக்களின் பழக்கவழக்கங்கள், பேச்சு முறைகள், நாட்டின் பெரும்பிரிவுகள்-உட்பிரிவுகள், நாட்டு ஆட்சிமுறை, சமண - பெளத்த சைவ சமயக்கருத்துக்கள் இன்ன பிறவும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. இதன்கண் கிடைக்கும் இச்செய்திகள் சோழர்கால இலக்கியங்கள் எதனிலும் கிடைக்கா. ஒருபக்கம் பல்லவர் கால வரலாற்றையும் மற்றொரு பக்கம் சோழர்கால நாட்டு நிலையையும் மொழி நிலையையும், சைவசமய நிலையையும் உள்ளடக்கிக் கொண்டுள்ள இந்நூல், தமிழர் நற்பேற்றின் பயனாய்த் தோன்றியதென்னல் மிகையன்று. இந்நூலிருந்து சேக்கிழாருடைய இலக்கியப் புலமை, இலக்கணப் புலமை, திருமுறைப் புலமை, இசை -நடனம்- மருத்துவம்-வான நூல் முதலிய பல்கலைப் புலமை சைவ சித்தாந்த அறிவு முதலியவற்றை நன்கறியலாம். இவை விரிப்பிற்பெருகும்." பெரியபுராணம் ஏற்பட்ட பின்னரே 63 நாயன்மார்கட்கும் சிற்பங்கள் ஏற்பட்டன; கோயில் தோறும் சிலைகள் ஏற்பட்டன; விழாக்கள் பெருகின என்னும் விவரங்களைச் சோழர்காலக் கோயில்களிலிருந்தும் கல்வெட்டுக் களிலிருந்தும் நன்கறியலாம்.