பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ச சோழர்காலச் சைவ இலக்கியம்

எல்லா உயிர்களிடத்தும் கலந்திருப்பவன்; அனைத்தும் உணர்கின்ற பேரறிவு, அனைத்தும் தன் வயத்தே யுடைமை, பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றல், தோற்றமில்லாத தன்மை, பாசமின்மை, குற்றமற்றதன்மை, விகாரமின்மை என்னும் எட்டுக் குணங்களையும் உடையவன் சிவன் என்பன போன்ற சமயக் கருத்துக்கள்" பல இந்நூலில் ஆங்காங்கு கூறப்பட்டுள்ளன. -

தில்லை - உலா

- இஃது இன்றளவும் அச்சேறாத நூல்; சிதைந்தநிலையில் முற்றுப் பெறாதிருப்பது. இது தமிழ்ப் பொழிலில் வெளியிடப்பட்டது:" தில்லையில் உள்ள கூத்தப்பிரான் உலாவினை விளக்கிக் கூறும் நூல். இது தில்லையைப் பற்றிய நூலாயினும், திருநீற்றுச் சோழன் ஒருவனைப் பற்றியே கூறி, அவன் சந்ததியார் செய்த திருப்பணிகளையோ அவர்கள் பெயரையோ குறியாமையின், திருநீற்றுச் சோழன் காலத்தில் செய்யப்பட்டதெனக் கருதலாம். இறைவனது உலாவில் திருநீற்றுச் சோழன் குதிரைமீது முன்சென்றதாகவும், பிறகு சேரமான் பெருமான், வரகுணன், நால்வர் படிமங்கள் தேர்களில் சென்றதாகவும், அவற்றுக்குப் பிறகு இறைவன் சென்றதாகவும் உலாக் கூறுகிறது. ஆதிசிவாகமப்படிதில்லையில் பூசை நடந்தது. சிற்றம்பலப் பொன்தகடு ஒவ்வொன்றின்மீதும் 'சிவாயநம' என்னும் ஐந்து எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருந்தன" என்பன குறிப்பிடத்தக்கவை. இந்நூலில் சமயாசர்ரியர் நால்வர், சேரமான் பெருமாள், கோட்புலி, சிறுத்தொண்டர், சண்டீசர் பற்றிய அருட் செயல்கள் காண்கின்றன.” சைவசித்தாந்த சாத்திரங்கள்’

(1) திருவுந்தியார், (2) திருக்களிற்றுப்படியார், (3) சிவஞானபோதம், (4) சிவஞானசித்தியார், (5) இருபா-இருபஃது, (6) உண்மை விளக்கம், (7) சிவப்பிரகாசம்,(8)திருவருட்பயன், (9) வினா - வெண்பா, (10) போற்றிப் பஃறொடை, (11) கொடிக்கவி, (12) நெஞ்சு விடுதூது, (13) உண்மை நெறி விளக்கம், (14) சங்கற்ப நிராகரணம் என்பன. இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இடச்சுருக்கம் கருதி, ஓரளவு இங்கு கூறலாம்.

1.திருவுந்தியார்

இது சிவஞானபோதத்திற்குமுற்பட்டநூல், இதனைச்செய்தவர் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்." இந்நூல், சிவஞான