பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 - சோழர்காலச் சைவ இலக்கியம்

உயிர்கட்குக் கனவுநிலை; மேலும் சில குறைந்தபொழுது 'உறக்கநிலை எனப்படும்; இவையாவும் நீங்கி உயிர் தன்னிலை நின்றபோது பேருறக்கநிலை எனப்படும். உயிரின் அகங்காரம் ஒடுங்கிய நிலை உயிர்ப்பு அடக்கம் எனப்படும். இவை அனைத்தும் நான்காம் சூத்திரத்துட்கூறப்பட்டுள்ள செய்திகள்.

கருவிகள் அறிவற்றன. ஆதலின் தம்மையும் அறியா, தம்மைச் செலுத்தும் உயிரினையும் அறியா, அவைபோல உயிர்களும் தம்மை அறியா தம்மைச்செலுத்தும் இறைவனையும் அறியா என்பது ஐந்தாம் சூத்திரத்துப்பொருளாகும். 岑 -

சத்து, அசத்து என்னும் இரு மொழிகட்கும் இலக்கணம் உரைப்பது ஆறாம் சூத்திரம். சத்து என்றும் கேடின்றி விளங்கும் பொருள். எனவே, இறை ஒன்றே, அவ்விலக்கணத்திற்கு இலக்கியமாகும். ஆயினும், சைவ சித்தாந்தத்தில் முப்பொருள்களாகிய இறை, உயிர், உலகம் என்பன என்றும் பொருள்களாக ஒப்புக்கொள்ளப்பட்டவை. ஆதலின் அவை மூன்றும் சத்தே ஆகும். உயிரும் உலகமும் விகாரமடைகின்றமையின் அசத்தாதல் பெறப்படும். இம்மூன்றினையும் வேறு பிரித்து அறிதற்கு அவை முறையே சிவ - சத்து, சத - சத்து, சட - சத்து என்று குறிக்கப்பட்டன, இவற்றின் விளக்கம் விரிவஞ்சி விடுகின்றாம்.

சாதன இயல்

சார்ந்ததன் வண்ணமாதல் உயிரின் சிறப்பிலக்கணம். அஃது அசத்தாகிய உலகத்தையும், சத்தாகிய பரம்பொருளையும் அறிய வல்லது; அசத்தை விட்டுச்சத்தைப் பற்றக் கூடியது என்பது ஏழாம் சூத்திரத்தில் விளக்கப்படுகிறது. உயிர்களின் தவத்தால் இறைவன் குருபரன்வடிவங்கொண்டுவந்து, பக்குவம் உடையார்க்கு ஞானத்தை உணர்த்தித்தன்பால் அவர்களைச்சேர்ப்பன் என்பதை எட்டாம்குத்திரம் விளக்குவதாகும், ஞானம் பெற்றவர் ஐந்தெழுத்து ஒதி ஞானநிலையைக் காக்கவேண்டும் என்பது ஒன்பதாம் சூத்திரத்திற் கூறப்படுகிறது. ; * : * * : , ,

பயன் இயல்

அவ்வாறு ஞானத்தைப் பேணும் உயிர்கள் இறைவன் தம்முடன் - ஒற்றித்து நிற்றலால் பாசநீக்கம் பெறும் என்பது 10ஆம் சூத்திரத்துள் விளக்கப்படுகிறது. இறைவன் உயிர்கட்குத் துணையாக நின்று சிவப்பேறு அல்லது முத்தி நிலையைக்காட்டுவான்;அவை காணுமாறு