பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ச. சோழர்காலச்சைவ இலக்கியம்

சரியை முதலிய நெறிகளில் ஒழுகி அடைந்த சிவப்பேற்றின் நிலையும்."நாமேபிரமம் என்பதன் இழிவும்."சைவ்சித்தாந்தமுத்திப் பெருநிலையும்" முறையாக நன்கு விளக்கப்பட்டுள்ளன. -

- 5. கொடிக்கவி : இது மிகச் சிறிய நூல் 4 வெண்பாக்களால் ஆகியது. ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் என்ற பகுதி" இன்புறத்தக்கது. ஐந்தெழுத்தின் நுட்பம் இறுதி வெண்பாவிற் குறிக்கப்பட்டுள்ளது. இது தில்லையிற் கொடியேறும் பொருட்டுப் பாடிய நூலாதலின் கொடிக்கவி எனப்பெயர் பெற்றது. -

6. நெஞ்சுவிடு தூது : இஃது ஆசிரியர் தமது உள்ளத்தை மறைஞானசம்பந்தர்பால் மாலைவாங்கும்படிதுதுவிடுமுகத்தால் பல நூல்களின் பொருள் முடிபையும் விளக்குவது, கலிவெண்பாவினால் ஆகியது; 129 கண்ணிகளை உடையது. தசாங்கம் விரித்துரைக்கும் பகுதி படித்து இன்புறத்தக்கது. ஞானாசாரியன் பாச நீக்கம் செய்யும் திறத்தினை விளக்கும் பகுதியும், கத்தும் சமயர் புன்னெறிகளில் விழாது செல்லும் திறமும்' குறிக்கத்தக்கவை. -

7. உண்மை நெறி விளக்கம் : இது தத்துவ ரூபம், தத்துவக் காட்சி, தத்துவ சத்தி, ஆன்ம வடிவம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்னும் பத்துக் காரியங்களை இனிது விளக்கும் நூல். இத் தசகாரியம் பற்றிய குறிப்புகள் முன்சொன்ன சிவப்பிரகாசத்தில் உள்ளன. அவற்றின் விரிவே இந் நூலாகும். -

8. சங்கற்ப நிராகரணம்: இது அகச் சமயங்கள் பலவற்றின் கொள்கைகளைக் கூறி, அவற்றைச் சித்தாந்தப் பார்வையால் மறுக்கும் நூல். சிவஞான சித்தியார் - பரபக்கமும் இந் நூலும் சித்தாந்த சைவத்தின் வேறான சமயக் கொள்கை வேறுபாடுகளை அறிதற்கு மிகவும் பயன்படுகின்றன.நிமித்த காரணபரிணாமவாதி சங்கற்பத்தில் அப்பர், சம்பந்தர் திருப்பதிகங்கள், திருவாசகம், திருவிசைப்பா, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி எடுத்தாளப்பட்டன. சைவசித்தாந்தநிலையே பல்லாற்றானும் மிகச் சிறந்தது என்பதை இச் சிறு நூல் நன்கு விளக்குகிறது. . X