பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி -ఖె 19

தீர்த்தங்களையும் கோயில்களையும் தரிசித்து, மனலூரை அடைந்தான் என்பது காணப்படுகிறது." அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையாகத் தெற்கே வந்து பாண்டியன் மகளை மணக்க விரும்பியபோது பாண்டியன் அவனைப் பார்த்து, "என் முன்னோர் சிவனைப் பூசித்து அவன் அருளால் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றனர். எனக்கும் ஒரே குழந்தைதான் பிறந்தது. அவளே நீ மணக்க விரும்பும் பெண்," என்றான். அப் பழைய காலத்திலேயே காவிரி, பொருநையாறுகள் சிறந்த தீர்த்தங்களாகக் கருதப்பட்டன; காவிரியின் இருகரைகளிலும் சோலைகள் இருந்தன், அங்கே இருடிகள், வேத வேதாந்தங்களில் வல்ல அந்தணர் ஆசிரமங்கள் இருந்தன என்பன மகா பாரதத்துள் குறிக்கப்பட்டுள."

சிவன், முருகன், திருமால், பலராமன், கொற்றவை முதலிய தெய்வங்கட்குக் காவிரிப்பூம் பட்டினம் மதுரை போன்ற பெரிய நகரங்களில் கோயில்கள் இருந்தமை முன்னரே கூறப்பட்டது.நீல நாகம் நல்கிய கலிங்கத்தை ஆய்வேள், ஆல மரத்தடியில் இருந்த சிவனுக்கு அளித்தான் என்று கூறப்படுவதால், ஆய் நாட்டில் சிவன் கோவில் இருந்தமை அறியலாம்." தொண்டை நாட்டுக் குளங்கள் சிலவற்றில் தாமரை மலர்கள் பூத்திருக்கும். அவை தெய்வங்கட் குரியவை," எனவரும் பெரும்பாண் ஆற்றுப்படை குறிப்பினால், அக் குளங்களைச் சார்ந்த ஊர்களிற்கோயில்கள் இருந்தமையும் பெறப்படும். தொண்டை நாட்டில் காஞ்சிபுரத்தில் திருவெஃகா" என்ற பெருமாள் கோயில் இருந்தது. அக் கோயிலில் திருமால் பாம்பணையில் பள்ளிகொண்டுள்ளான்." கோயில்களை அடுத்துச் சோலைகள் இருந்தன; கோவில்கட்குச்சிறுவர் முதல் பெரியவர் ஈறாக அனைவரும் சென்று வழிபட்டனர்." கரிகாற்சோழன் உறையூரைப் பெரிதாக அமைத்துக் கோயில்களை முன்போல நிலைநிறுத்தினான்."

வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள செங்கம் என்பது பழைய காலத்தில் செங்கண்மா எனப்பட்டது. அதனை ஆண்ட நன்னனது நவிரம் என்ற மலையில், காரியுண்டிக் கடவுள் எனப்பட்ட சிவபிரான் கோவில் இருந்தது." செங்கண்மா என்னும் ஊர், அங்குள்ள சிவன் கோவில் கல் வெட்டுக்களில், கண்ணை எனப்படுகிறது. கண்ணை என்பது கி.பி.7ஆம் நூற்றாண்டினரான திருநாவுக்கரசரால் பாடப்பட்டுள்ளது. - -

கி.பி. 7ஆம் நூற்றாண்டினரான திருஞானசம்பந்தர் பாடிய க்ஷேத்திரக் கோவையில், (7ஆம் பாட்டில்) மயிண்டீச்சுரம் என்பது காணப்படுகிறது. இது சேலம் மாவட்டம் தர்மபுரி தாலுகா-அதமன்