பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 ச. சைவ சித்தாந்த வளர்ச்சி

- அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி

பகவன் முதற்றே உலகு என்னும் முதல் திருக்குறளாலும் அறியலாம். - அகரம்முதலின்எழுத் தாகிநின்றாய்" எனச் சுந்தரரும், . . . .

‘. . . . அக்கரங்கள் இன்றாம் அகர வுயிரின்றேல்' என மெய்கண்டாரும், * . . . அக்கரங்கட்கெல்லாம் அகரவுயிர் நின்றாற்போல் மிக்க உயிர்க்குயிராய் மேவினோம்" 6f5öf மனவாசகங்கடந்தாரும்,

அகர வுயிர்போல் அறிவாகி எங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து என உமாபதி சிவமும் இறைவன் நிற்கும் நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளனர். இந்த நிலையே அத்வைதம்’ என்பது. இறைவன் தானாய், வேறாய், உடனாகும் தன்மையன். இவ்விறைத் தன்மையைச் சம்பந்தர், - - -

ஈறாய்முதல் ஒன்றாயிரு பெண்ஆண் குணமூன்றாய், மாறாமறை நான்காய்வருபூதம்அவை ஐந்தாய் ஆறாய்சுவை ஏழோசையோ டெட்டுத்திசைதானாய் வேறாய்உடன் ஆனான்இடம் விழிம்மிழலையே." என நன்கு விளக்கியுள்ளார். இதனையே, "அவையே தானேயாய்” என்னும் சிவஞானபோதச்சூத்திரமும்" விளக்குகிறது.

ஐந்தொழிலும் ஐந்தெழுத்தும்:இவ்வாறு எங்கும்.நிறைந்துள்ள இறைவன் உயிர்களிடம் கொண்டகருணையால் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறான். அத்தொழில்களைச் செய்யும் இறைவனைக் கூத்தப் பெருமானாக முன்னோர் உருவகித்தனர். அப்பெருமானுடைய கரங்களில் உள்ள படைகளும் பிறவும் ஐந்தொழிலையே உணர்த்துகின்றன என்பர். -

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரணங்கி தன்னில் அறையிற்சங்கரம் :