பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 ச. சைவ சித்தாந்த வளர்ச்சி

பிறந்திளைத்தேன்' என்று மாணிக்கவாசகர் கூறுதல் இதற்கேற்ற சான்றாகும். உயிர்களிடத்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகைக் குற்றங்களுள் ஆணவம் என்னும் மலமாகிய அழுக்கைப் போக்கவே பிறவிகள் வருவன. திருமூலர் இந்த ஆணவத்தை விட்டவர் மெய்ஞ்ஞானிகள்' என்கிறார். அப்பர் ஆணவத்தை, 'மூலநோய்' என்கிறார்; -

மூலநோய் தீர்த்த முதல்வன் கண்டாய்" இவ் ஆணவம் அறியாமையிற் புகுத்தும் என்பது அப்பர் கருத்து. அந்த அறியாமையைப் போக்கும் மருந்து இறைவனே என்பதை அப்பர், "மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய்.” எனக் குறிக்கிறார்.

கன்மம் என்னும் அழுக்கு உயிர்கள் செய்த வினைகளின் சேர்க்கை.அதன்வழியாய் உடல், அதன்கண்நிற்கும் கருவிகள், அவை நுகரும் போகங்கள், அவை விளங்கும் உலகம் என்பன உண்டாகின்றன. இவையாவும் மாயையின் காரியங்கள். எனவே, ஆணவ அழுக்கைப் போக்கப் பிற அழுக்குகள் சேர்க்கப்படுகின்றன. அழுக்கினைப் போக்க அழுக்கு உதவுமோ? திருமூலர்,

ஆகும் உபாயமே அன்றி அழுக்கற்று மோகம் அறச்சுத்த னாதற்கு மூலமே ஆகும் அறுவை அழுக்கேற்றி யேற்றல்போல் ஆகுவ தெல்லாம் அருட்பாசமாகுமே."

என்று பதில் கூறுதல் காண்க.

எழுமுடல் காண மாதி ഞെഖഥാ மலம லத்தாற் கழுவுவ னென்று சொன்ன காரணம் என்னை என்னில், செழுநவ அறுவை சாணி உவர்செறி வித்த ழுக்கை . முழுவதும் கழிப்பன் மாயை கொடுமலம் ஒழிப்பன் முன்னோன் என வரும் சிவஞான சித்தியார் பாடலும்" கவனிக்கத்தக்கது.

ஆணவத்தை அறுக்க உடம்பு இன்றியமையாதது. சுவரை

வைத்துக் கொண்டுதானே சித்திரம் எழுத வேண்டும்? இவ்வுடம்பின்

நன்மையைத் திருமூலர், ,

உடம்பார் அழியில் உயிரார் அழிவர். திடம்பட மெஞ்ஞானம் சேரவு மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே'

என்று கூறினர். உடலின் நற்பயனை,