பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 రకౌ பல்லவர்க்கு முற்பட்ட சைவ சமயம்

கோட்டையில் உள்ள சிவன் கோயிலின் பழைய பெயர். அக் கோவிற் கல்வெட்டுக்கள் அக் கோயில் மூர்த்தியை மயிந்தீசுவரம் உடையார் என்று வழங்கியுள்ளன. அக்கோவிலையுடைய அதமன் கோட்டை, அதியமான்கோட்டைஎன்பதன் மரூஉவாகும்.அதியமான் பல்லவர்க்கு முற்பட்டவன், ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன். அதனால் அவர் மகிழ்ந்து, - , , -

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி

நீல மணிமிடற்றொருவன் போல

மன்னுக பெரும நீயே" என அவனை வாழ்த்தியுள்ளார். இவ் வாழ்த்துடன் அவன் கோட்டைக்குள் சிவன் கோயில் உண்மையை இணைத்துப் பார்ப்பின், அக்கோயில் ஒளவையார் காலத்ததாக இருக்கலாம் என்று கூறுதல் பொருத்தமாகும்." -

  • . தமிழரசர், கோயில் மூர்த்தங்கட்கு நகைகள் முதலியன

செய்தளித்தனர்." பண்டைக்காலக் கோயில்கள், கோயில், நியமம், நகரம், கோட்டம், பள்ளி எனப் பலவாறு பெயர் பெற்றிருந்தன." சமணர், பெளத்தர் கோயில்கள் பள்ளி என்றும் வழங்கப்பட்டன.”

கோயில் அமைப்பு

கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பல்லவ மகேந்திரவர்மன் அமைத்த மண்டபப்பட்டுக் குடைவரைக் கோயிலில் (Rock-Cut Temple) அவன் வெட்டுவித்த கல்வெட்டு ஒன்று இருக்கிறது. 'அழியத் தக்க மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் இவை இல்லாமல் விசித்திர சித்தன் இக்கோயிலை மும்மூர்த்திகட்கு அமைத்தான்," என்பது அக் கல்வெட்டு வாசகம். இதனை நன்கு ஆராயின், (1) மகேந்திரனுக்கு முன்பே தமிழகத்திற் கோயில்கள் இருந்தன என்பதும், (2)அவை அழியத்தக்க மண், மரம், உலோகம், செங்கல், சுண்ணாம்பு இவற்றால் ஆனவை என்பதும், (3) மகேந்திரனே கோயில்களைப் பாறையிற்குடைவித்தான் என்பதும் தெளிவாகின்றன." .. م . . . . . . . . . . - - -

பண்டைக்காலக் கோயில்கள் அழியத்தக்க பொருள்களால் ஆனவை என்பதை, - . -

காடமர் செல்வி கழிபெரும் கோட்டமும் குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக்கோட்டமும்"