பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 o- சைவரது சமுதாய வாழ்க்கை

மணந்து கொண்டார். சிவப்பிராமணரான சுந்தரர் கணிகையரான பரவையாரையும், வேளாளப்பெண்ணான சங்கிலியாரையும் மணந்து கொண்டமையும், சைவப் பெண்மணியான மங்கையர்க்கரசியார் சமணனான பாண்டியன் நெடுமாறனை மணந்துகொண்டதும், தமிழ்ச் சைவனான இராசராசன் தமிழனல்லாத சாளுக்கிய விமலாதித்தனுக்குத் தன் மகளைக் கொடுத்ததும் சைவரது பரந்த நோக்கத்தையும் அரசியல் அறிவையும் குறிப்பனவாகும். சைவ அரசர்கள் பல மனைவியரை மணம் செய்து கொண்டனர் என்பது பல்லவர் - சோழர் வரலாறுகளிலிருந்து அறியலாம். ஆதிசைவராகிய சுந்தரரும் காரைக்காலம்மையார் கணவனும் இருமனைவியரை மணந்து கொண்டமை காண்கிறோம். எனினும், ஒரு மனைவி வாழ்க்கையே பெருவழக்காக இருந்தது. - . . . . . . .

மணவாழ்க்கை: மனைவி கணவனுக்குத் துணைவி; கணவன் மனைவிக்குத் துணைவன். கணவனும் மன்னவியும் மனமொத்தே இல்லறத்தை நடத்திவந்தனர். கணவன் மனைவியின் யோசனைப்படியே வீட்டுக் காரியங்களைச் செய்து வந்தான் என்பது சிறுத்தொண்டர், இளையான்குடிமாறர் இவர்தம் வரலாறுகளிலிருந்து அறியலாம்.'மனைவி கணவன் அருகிருந்து உண்பித்தல் வழக்கம்." கணவன் செய்யும் சிவத் தொண்டுகளுக்கு மனைவி ஆதரவளித்தல் வழக்கம். இதற்கு நமிநந்தியடிகள் போன்ற நாயன்மார் வ்ரலாறுகளும் பல்லவ சோழ அரசர்கள் வரலாறுகளும் ஏற்ற சான்றாகும். முதலாம் இராசராசன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிப் பல நிவந்தங்கள் விட்டபொழுது அவனுடைய தமக்கை, மனைவிமார் ஆகியோரும் அதே கோயிலுக்குப் பல அறங்கள் செய்தனர் என்பதும், செம்பியன் மாதேவிச் சிவன் கோயிலுக்குச் செம்பியன் மாதேவியருடைய மருமக்கள் அனைவரும் அறங்கள் செய்தனர். என்பதும் சைவக் குடும்பத்தின் ஒருமைப்பட்டசமயப்பற்றைநன்கு விளக்கும் சான்றுகள் ஆகும்.கணவன்ஒழுக்கம்கெட்டவனாயின் மனைவி அவனை அறவே வெறுத்தாள் என்பது திருநீலகண்டர் வரலாற்றிலிருந்து அறியலாம்." கணவன் சமயத்தில் அழுத்தமான பற்று அற்றவனாயினும் மனைவியின் சிவத் தொண்டுக்கு ஊறு செய்யவில்லை என்பது காரைக்கால் அம்மையார் வரலாற்றால் நன்கறியலாம்." சமண்னான கணவன் அறியாது.சிவபூசைசெய்த மனைவியார் மங்கையர்க்கரசியார்' ஆவர். ஆயினும் இம் மனைவியர் தம் கணவரை முழு அன்புடன் நேசித்தனரே அன்றி வெறுத்திலர்." சிவபூசையில் கணவனுடன் ஒத்துழைத்தாற் போலவே, அடியார்களை உபசரித்தலிலும் மனைவி