பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ச. பல்லவர்க்கு முற்பட்ட சைவ சமயம்

மக்கள் கொண்ட சிவனார் பெயர்கள்

- இறையனார், உருத்திரன், சத்திநாதன், பெருந்தேவனார், பேரெயில் முறுவலார், வெண்பூதி என்பன சிவபிரானைக் குறிக்கும் பெயர்கள். பெருந்தேவன் என்பது மகாதேவன் என்னும் பெயர்ப் பொருளையுடையது. பேரெயில் முறுவலார் என்பது திரிபுரங்களை முறுவலால் எரித்ததைக் குறிக்கும் பெயர்; வெண்பூதி என்பது திருநீற்றை அணிந்தவர் என்பதைக் குறிக்கும் பெயர்." -

பாடலும் ஆடலும் .

- குறிஞ்சி முதலிய நிலங்கட்கு உரிய இசைக் கருவிகள் முதலியன வழக்கில் இருந்தன. இந்த நிலத்திற்கு இந்த நேரத்தில் இன்ன பண் வாசிக்கவேண்டும் என்ற வரையறை இருந்தது.' பக்தர்கள் கோயில்களில் பண்ணோடு தோத்திரங்களைப் ரடினர்."

குரவைக் கூத்து, துணங்கைக் கூத்து.' குடக் கூத்து, சிவபிரான்

ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் கூத்து வகைகள், மாதவியாடிய கூத்து வகைகள்,' முதலியன அக் கால நடனச்சிறப்பை நன்கு காட்டுவன. ஆடல் மகளிர் ஐந்து வயதுக்குமேல் ஏழு ஆண்டுகள் ஆடல் ப்ாடல்களிலும் பலவகைக் கலைகளிலும் பயிற்சி பெற்று வந்தனர். ஆடல் - பாடல் கலைகளைக் கற்பிக்கும் ஆடல் ஆசிரியன் அமைதி, இசை ஆசிரியன் அமைதி, மத்தள ஆசிரியன் அமைதி, குழலாசிரியன் அமைதி, யாழ் ஆசிரியன் அமைதி, அரங்கின் அமைதி, அரங்கிற் புகுந்து ஆடும் முறை இவைபற்றி எல்லாம் சிலப்பதிகாரம் விளக்கமாகக் கூறுகிறது.' விழாக் காலங்களிலும் பிற காலங்களிலும் ஆடல்-பாடல்கள் நிகழ்ந்தன என்பதற்குச் சிலப்பதிகாரமும் பிற தொகை நூல்களுமே சான்றாகும். சேரன் செங்குட்டுவன் அரண்மனைக்குள் இருந்த அரங்கத்தில் ஏறிச் சாக்கையன் ஒருவன், இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தை ஆடிக் காட்டினன் என்பது சிலப்பதிகாரச் செய்தி." இச் சாக்கையர் பண்டைக்கால முதல் பிற்காலச் சோழர்காலம் வரை தமிழகத்தில் கூத்தராயிருந்தனர் என்பதும், அரசர்களிடம் மானியம் பெற்று வாழ்ந்தனர் என்பதும் தெரிகின்றன.'

சமண சமயம்

சந்திரகுப்தன் காலத்தில் சமணம் தென்னாடு போந்தது என்பது அறிஞர் கூற்று. அச் சமணம் திகம்பர சமணம் என்பதும் அன்னார் கூற்றாகும். தென்னாட்டில் திகம்பர சமணமே பல நூற்றாண்டுகள்