பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி *ā- 39

அக்காலச் சமய நிலை

பெளத்தம்

முன் சொன்ன புத்ததத்தர் காவிரிப்பூம் பட்டினம், உரகபுரம் (உறையூர்), பூதமங்கலம்,காஞ்சிபுரம் என்னும் இடங்களிலவாழ்ந்தவர் என்பதால், அவ்விடங்களில் பெளத்த விஹாரங்களும் மடங்களும் இருந்தனவாதல் வேண்டும். அவர் காவிரிப்பூம்பட்டினத்தில் கண்டதாசன் கட்டிய புத்த விஹாரத்தில் இருந்து அபிதம்மாவதாரத்தை எழுதினார். அவரேவிநயவிநிச்சயம் என்னும் தமது நூலின் இறுதியில், 'இந்நூல் புத்த சீடர்க்காக வரையப்பட்டது. நான் சோணாட்டில் உள்ள பூதமங்கலத்தில்" உள்ள வேணுதாச விஹாரத்தில் தங்கியிருந்த பொழுது எழுதப்பட்டது என்று வரைந்துள்ளார்." புத்ததத்தர் அச்சுதவிக்கந்தனைத் தமது நூலிற் குறிப்பிடலால், அவன் பெளத்த சமயத்தில் கருத்துடையவனாக இருந்திருக்கலாம். இக் காலப் பல்லவ அரசர்களுள் இருவர் புத்தவர்மன் என்று பெயர் தாங்கியிருத்தல், அவர்களது பெளத்த சமயச் சார்பினைக் காட்டுகிறதென்னலாம். சிம்மவர்மன் என்ற பல்லவன் ஒருவன் அமராவதியில் புத்த முனிவர்களுடைய உபதேசங்களைக் கேட்டுப் புத்தர் சிலை ஒன்றை எழுப்பி, அதனைப் பொன்னாலும் மணிகளாலும் அலங்கரித்தான் என்று அமராவதிக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது."a

சமணம்

நிக்கந்தம் அல்லது திகம்பர சமணம் என்பதே தமிழகத்தில் இருந்த சமயமாகும். திகம்பர சமண ஆசாரியர்கள் தென் இந்தியா முழுவதும் தங்கள் சமயத்தைப் பரப்பினர். அவருள் குந்த குந்தர் என்பவர் சிறந்தவர். அவர் பாடலிபுரத்தில் (திருப்பாதிரிப்புலியூரில்) சமண மடத்தில் தங்கிப் பல்லவ அரசனும் தம் மாணவனுமாகிய சிவகுமார மஹாராஜன் என்பவனுக்கு, அக்கால அரசாங்க மொழியான பாலி மொழியில் சமய நூல்களை வரைந்தார். அவர் பலமுறை சேர, சோழ,பாண்டியநாடுகட்குச் சென்று தமது சமயத்தைப்பரவச்செய்தார். அவருக்கு அடுத்தபடியாகக் கூறக் கூடிய ஆசாரியர் சமந்தபத்ரர் என்பவர். அவர் பெளத்தர்களை வாதத்தில் வென்றவர்; வட இந்தியப் பாடலிபுத்திரம், சிந்து, திக்க, வைதேகம், காஞ்சிபுரம் முதலிய நகரங்கட்கும் நாடுகட்கும் சென்று சமயப் பிரசாரம் செய்தவர்.