பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4O సకో முற்காலப் பல்லவர்காலத்தில் சைவ சமயம்

கி.பி.4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமண ஆசாரியருள் சிறந்தவர் சிம்மநந்தி என்பவர். கங்கநாடு ஏற்படக் காரணமாயிருந்தவர் அவரே. அதனால் கங்க நாட்டில் சமணம் மிகவுயரிய நிலையை அடைந்தது. அவருக்குப் பின் வக்ரக்ரீவர், வச்சிரநந்தி என்பவர்கள் சிறப்புற்றவர்கள். பூரீவர்த்ததேவர், குமாரசேனர், சிந்தாமணி ஆசாரியரும் குறிக்கத்தக்கவர். பூஜ்யபாதர் என்பவர் சமண முனிவர்; யோகத்திற் சிறந்தவர். அகளங்கர் என்பவர் புகழ் பெற்ற சமண ஆசாரியர். மேற்சொன்ன ஆசாரியர்களைப்போலவே அவரும் கங்கநாட்டிலிருந்து தமிழகம் முழுவதையும் சுற்றினவர்; புத்தர்களை வாதில் வென்றவர். அவர் காலத்தில் வட இந்தியாவிலிருந்து திகம்பர சமணர் பலர் தென்னாட்டிற்கு வந்து ஆனைமலை, மதுரை, ஸ்ரவண பெல்கோலா முதலிய இடங்களிற் குடியேறினர். அகளங்கர், சைவர், பாசுபதர், பெளத்தர், காபாலிகர், கபிலர் (கபில மதத்தார்) என்பவர்களைத் தர்க்கத்தில் வெல்ல முனைந்தவர்'

பாடலி: சமண மடம்

- தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பாடலி புரத்தில் சமண மடம் ஒன்று இருந்தமை முன் கூறப்பட்ட தன்றோ? அங்குக் கி.பி. 458-இல் லோகவிபாகம் என்ற திகம்பர சமண நூல் படியெடுக்கப்பட்டது. அக் காலத்தில் சிம்மவர்மன் என்ற பல்லவன் நாட்டை ஆண்டு வந்ததாக அவர் அந் நூலிற் குறித்துள்ளார். அதே நூற்றாண்டில் அம் மடத்தில சிம்ம சூரி, சர்வநிந்தி என்ற சமண ஆசாரியர்கள் இருந்தார்கள். அவர்கள் பிராக்ருதத்திலும் வடமொழியிலும் சிறந்திருந்தனர். அம் மடம் பல்லவ மன்னர் ஆதரவைப் பெற்றிருந்ததெனக் கூறல் தவறாகாது. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் அம்மடம் மகேந்திரவர்மனால் ஆதரிக்கப்பட்டது." திகம்பர சமண ஆசாரியர்கள் சமயப் பிரசார நிமித்தம், பாடலியிலிருந்து டெல்லிக்கும் ஜெய்பூருக்கும் சென்றனர்" என்பதிலிருந்து இம் மடத்தின் சிறப்பினை நன்கறியலாம். சமண காஞ்சி

காஞ்சியில் வேகவதி ஆற்றங்கரையில் உள்ள திருப்பருத்திக் குன்றம் பல்லவர் காலத்தில் சமண காஞ்சி எனப்பட்டது; கங்கநாட்டுத் திகம்பர சமணரால் கல்வியிற் சிறந்த இடம் எனப் பாராட்டப்பட்டது. அது நீண்டகாலமாக இருந்து வந்ததாகும்."