பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி జజ్ఞి

பதிப்புரை

கிலேந்தோறும் தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய அறிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் (1907-1967). தென்னிந்திய வரலாறு பற்றியும் இலக்கியம் பற்றியும் வித்துவான் மா. இராசமாணிக்கம் எழுதியுள்ள நூல்கள் பலவும் அவரது மகத்தான சாதனைகளாகும் என்று புகழ் பெற்ற வரலாற்று அறிஞரான ஈராஸ் பாதிரியார் பாராட்டியுள்ளார். -

டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் சாதனைகளில் ஒன்றுதான் இவருடைய முனைவர் பட்ட ஆய்வாகிய சைவசமய வளர்ச்சி என்னும் இந்நூல்.

'பல்லவர், சோழர் வரலாறுகள் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியும் எம்.ஓ.எல். பட்டத்திற்காகச் சேக்கிழாரும் அவருடைய வரலாற்று மூலங்களும்' என்று ஆய்வு செய்த பணியும் கல்வெட்டுகள், இலக்கியங்கள் வழியாக இடைக்காலப் பல்லவர், சோழர் பற்றி அறிய வகைசெய்தன. சைவசமயம் பற்றிக் கிடைத்த குறிப்புகள், தனியே அச்சமய வளர்ச்சி பற்றி எழுதத் தூண்டின. அதுவே டாக்டர் பட்ட ஆய்விற்கும் நுவல் பொருளாயிற்று' என்று இந்த ஆய்வு நூல் உருவான வரலாற்றைத் தம் ஆய்வேட்டின் முன்னுரை யில் குறிப்பிட்டுள்ளார் டாக்டர் மா.இராசமாணிக்கனார்.

'ஓர் ஆராய்ச்சியாளர் கல்வெட்டுகளின் அடிப்படையில் தமது கருத்தைச் சொல்லும்போது அவரது கருத்து உறுதியானதாகவும் மறுக்க முடியாததாகவும் அமைந்துவிடுகிறது. வித்துவான் மா. இராசமாணிக்கம் இந்த வழியைப் பின்பற்றித் தம் மதிப்பை மிகவும் உயர்த்திக்கொண்டுள்ளார்' என்பர்