பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ఖి 49

புகழ்த்துணையார் : இவர் ஆதிசைவர் கும்பகோணத்தை அடுத்த செருவிலிபுத்தூர்ச் சிவன் கோயில் அர்ச்சகர். கொடிய பஞ்ச காலத்தில் ஊரைவிட்டு ஓடாது சிவபூசை செய்து வந்ததால் சிவனால் பஞ்சம் தீரும் வரை நாடோறும் படிக்காசு தரப்பட்டவர்." இவர் சம்பந்தரால் பாராட்டப்பட்டவர்."

எறிபத்தர் : இவர் கருவூரினர்; சிவனடியார்க்குத் தொண்டு செய்து வந்தவர்; சிவன் கோயில்" ஆண்டார்" ஒருவர் பறித்துவந்த பூக்கள் இருந்த குடலையைப் புகழ்ச் சோழரது பட்டத்து யானை மிதித்து, ஆண்டாரையும் கீழே தள்ளிவிட்டதால் அந்த யானையையும் அதன்பாகரையும் தம் மழுவால் கொன்றவர்; அச்செயலுக்காகப் புகழ்ச் சோழரால் பாராட்டப்பட்டவர்."

புகழ்ச் சோழர் :இவர்தம் நாட்டுக் கோயில்களில் பூசை சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்தவர்; தகடூர் அதியமானுடன்போர் செய்து தம் வீரர் கொணர்ந்த தலைகளில் ஒன்றில் சிறிய சடை இருந்ததைப் பார்த்து, சிவனடியார் ஒருவரைத் தம் வீரர் கொன்று விட்டனர் என்றெண்ணிப் பதறி நெருப்பில் வீழ்ந்து மாண்டவர்."

கூற்றுவநாயானர்: இவர் பேரரசர் என்பது முன்பே கூறப்பட்டது. இவர் சிவநாமத்தை (பஞ்சாக்ஷரம்?) நாவாற் செபித்தவர்; பல சிவன் கோயில்களில் திருப்பணி செய்தவர்." இவர் காலத்தில் தில்லை வாழ் அந்தணர்கள் சோழர்க்கு முடிசூடும் பெருமை பெற்றிருந்தனர்." அப்பெருமை கோச்செங்கணான் காலத்திருந்து ஏற்பட்டது போலும்!

நமிநந்தி அடிகள் : இவர் பிராமணர், திருவாரூர்க் கோயிலில் விளக்கெரிக்க விரும்பி ஒரு வீட்டில் எண்ணெய் கேட்டார். அவ் வீட்டார் சமணர். அவர்கள், ‘கையில் அனலையுடைய சிவனுக்கு விளக்கு ஏன்? வேண்டுமாயின், தண்ணீர் ஊற்றி விளக்கு எரியும்,' என்றனர். நமிநந்தி சிவனை வேண்டி நீரால் விளக்கெரித்தார். அவர் பெருமையுணர்ந்த சோழ அரசன் அக் கோயிலுக்கு வேண்டியன அளித்து, அவரை மேற்பார்வையாளராக நியமித்தான். அக் காலத்தில் திருவாரூர்க் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா நடந்தது. சுவாமி திருவாரூரிலிருந்து மணலிக்குக் கொண்டு செல்லப்பட்டது. விழாவில் கலந்து கொண்டவருள் சாதிகளைப் பார்க்கலாகாது. அனைவரும் சிவகணங்களே என்பதை நாயனார் சிவனருளால் உணர்ந்தார்." இவர் அப்பராலும் சம்பந்தராலும் பாராட்டப்பட்டவர்."

தண்டி' அடிகள் : இவரும் பிராமணர், பிறவிக் குருடர்; திருவாரூர்ச் சிவன் கோயில் குளக்கரையைச் சமணர்கள் பள்ளிகளும், பாழிகளும் கட்டிக் குறைத்தமையால், குளத்தைப் புதுப்பிக்க

ഓഫ്രൈ - 4