பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

每

50 (భొ முற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம்

முனைந்தார்; குருடர் இந்த வேலை செய்கிறார் என்பதைச் சமணர்கள் பரிகசித்தனர்; அவர் சிவனருளால் கண் பெறின், தாம் ஊரைவிட்டுப் போவதாக வாக்களித்தனர். சோழன் எதிரில் திருவருளால், தண்டி கண் பெற்றார்; சமணர் வெளியேறினர். அரசன் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துக் குளக்கரையைச் செப்பனிட்டான்.”

மூர்த்தி நாயனார் : மூர்த்தி நாயனார் வணிகர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டைக் கவர்ந்த களப்பிர அரசன் சமணச் சார்புடையவன்; சிவன் கோயிலுக்குச் சந்தனம் அரைத்துக் கொடுத்துவந்த இவருக்குச் சந்தனக்கட்டை கிடைக்காமற் செய்தான்; சிவன் கோயிலைக் கவனிக்கவில்லை. அவன் இறந்த பிறகே சைவம் தலை தூக்கியது.” பல்லவர்க்கு முற்பட்ட முதுகுடுமிப் பெருவழுதி கொடுத்த தானமும் புறக்கணிக்கப்பட்டது."

காரைக்கால் அம்மையார் : இவ்ர் வணிகர் மரபினர்; காரைக்காலைச் சேர்ந்தவர்"; புனிதவதி என்ற பெயரினர்; இளமை முதல் சிவபூசையில் மிக்கவர். இவர் திருவாலங்காடு சென்று பதிகங்கள் பாடி, மோட்சத்தை அடைந்தவர். இவர் சிறந்த தமிழ்ப் புலவர்; (1) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், (2) இரட்டைமணி மாலை, (3) அற்புதத் திருவந்தாதி என்ற மூன்று நூல்களைப் பாடியுள்ளார்."

திருமூலர் : இவரைப் பற்றியும் இவர் செய்த திருமந்திரம் பற்றியும் அடுத்த பிரிவில் விளக்கமாகக் கூறப்படும். - - வேறு சில அடியார்கள் : 63 நாயன்மார்களைக் குறிப்பிட்ட சுந்தரராற் குறிக்கப்படாதவர்கள் இவர்கள். இவர்கள் (1) நக்கீரதேவ நாயனார், (2) கபில தேவ நாயனார், (3) பரணதேவ நாயனார், (4) கல்லாடதேவ நாயனார் என்பவர்கள். இவர்கள் பாடல்கள் 11ஆம் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளன.

1. நக்கீரதேவ நாயனார் : பல்லவ்ர்க்கு முற்பட்ட நூல்களிற் குறிக்கப் பெறாத கண்ணப்பர் வரலாற்றை இவர் விரிவாகக் கூறலால், கண்ணப்பரைத் தவிர அப்பர் சம்பந்தரைக் குறியாமையால், இவர் காலம்.அப்பருக்குமுற்பட்டதென்னலாம்.” இவர்பாடியன:-(1) கயிலை பாதி காளத்தி பாதித் திருவந்தாதி, (2) திரு ஈங்கோய் மலை எழுபது, (3) திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, (4) திருவெழு கூற்றிருக்கை, (5) பெருந்தேவ பாணி, (6) கோபப் பிரசாதம், (7) காரெட்டு,

(8) போற்றித் திருக்கலி வெண்பா, (9) திருக் கண்ணப்ப தேவர்

திருமறம், என்பன."