பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ఘో G3

உலகங்கள், அவர்கள் தங்கள் உடலங்களை விடும் முறை, இடகலை, பிங்கலை நாடிகள், பிராண புருஷ - அணு, ஜீவ - பசு, போதம் என்னும் ஆறு, ஐம்புலன்களை அடக்கும் முறை, குருவின் வருணனை, கூடா ஒழுக்கம் முதலியன பேசப்பட்டுள்ளன.

8. எட்டாம் தந்திரத்தில் சிவத்திற்கலக்க உடம்பை விடும் முறை, 11 அவத்தைகள், ஞானோதயம் முதலியன குறிக்கப் பட்டுள்ளன. சித்தாந்தத்தின் விளக்கம், பிற சமயங்கட்கும் அதற்கும் உள்ள தொடர்பு, பதி-பசு-பாச விளக்கம், பிரமனும் மாலும் காணாத சிவன் என்பதற்குரிய தத்துவ விளக்கம், மூன்று குற்றங்கள், (காமம், வெகுளி, மயக்கம்), மூன்று பதங்கள் (தத், த்வம், அசி), மூன்று பரங்கள், மூன்று துரியங்கள், மூன்று முக்திகள், மூன்று ஸ்வரூபங்கள், முக்கரணங்கள், மூன்று சூனியங்கள் என்பன அடுத்துக் குறிக்கப்பட்டுள. -

காரிய - காரண உபாதிகள், உபசாந்தம், புறங்கூறாமை, சிவநிந்தை ஒழிப்பு, அகத்தாமரை பற்றிய வருணனை, மோட்சநிந்தை கூடாது, தத்துவ மசி, அகம் பிரம்மாசி என்னும் மகா வாக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சி, விஸ்வக்ராசம், உண்மை பேசல், ஆசையை ஒழித்தல், பக்தி வளர்த்தல், தூய்மை யடைவதிலும் விடுதலை பெறுவதிலும் நாட்டமுறுதல் முதலியன அடுத்துக் குறிக்கப்பட்டுள்ளன.

9. ஒன்பதாம் தந்திரத்தில் குரு, குருமடம், குரு தரிசனம், வைணவ சமாதி, ஸ்தூல, சூக்கும, அதிசூக்கும பஞ்சாக்ஷரங்கள் பேசப்பட்டுள; சிவானந்த நடனம், சுந்தர நடனம், பொன்னம்பல நடனம், பொன்தில்லை நடனம், ஆச்சரிய நடனம் என்பன விளக்கப்பட்டுள; ஞானம் மலர்தல், உண்மை ஞானத்தின் சிறப்பு முதலியன நன்கு கூறப்பட்டுள்ளன."

திருமூலர் குறித்த சமயப்பாதைகள்

1.திருமூலர் குறித்த யோகமுறைக்கும் பதஞ்சலி குறித்த யோக முறைக்கும் நிரம்ப வேறுபாடுகள் உள. அவை பதஞ்சலிக்குப் பிறகு நாட்டில் தோன்றியவை என்னலாம். அவற்றைத் திறம்பட விளக்குவதிலிருந்து திருமூலர் ஒரு பெரிய யோகி என்பதை உணரலாம்."

2. திருமூலர் குறித்த மந்திரோபாசன முறை சாக்த மதத்திலிருந்து கிளைத்தது என்னலாம். சக்தியைப் பெண்மைக்