பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இs - திருமந்திரம்

காபாலிகர் சிவனைக் கொடிய பைரவ வடிவத்தில் வணங்கினர்; உடம்பில் நீறு பூசினர்; தலை மாலை அணிந்திருந்தனர்; ஜடை உடையவர்; புலித் தோலாலான கெளபீனத்தை அணிந்தனர்; இடக்கையில் கபாலம் ஏந்தியிருந்தனர். இவர்கள் நரபலியிலும் ஈடுபட்டிருந்தனர்."

(4) வாமர் :- 'சடமும் சித்துமாகிய அனைத்தும் சக்தியின் பரிமாணமே. வாமநூல் விதித்த முறையே ஒழுகிச்சக்தியில் லயித்தலே முத்தி என்பது வாம மார்க்கத்தினர் கொள்கை. இவர்கள் 'சாக்தர்' எனப்படுவர். இம் மதம்பற்றி முன்னரே கூறப்பட்டது.

(5) பைரவர்:- "பெரும்பாலும் வாம மதத்தோடு ஒத்துச் சிறுபான்மை ஆசாரங்கள் வேறுபட்டுப் பைரவனே பரம்பொருள் எனக் கொண்டு, பைரவ மதத்திற் சேர்வதே முத்தி என்பது பைரவ மதத்தினர் கோட்பாடு."

(6) சைவம் :- சிவனையே முழு முதற் கடவுளாகக் கொண்டு, சரியை முதலிய நான்கினாலும் அவனை அடையப்பாடுபடும் சமயமே சைவம், பதி, பசு, பாசம் என்னும் மூன்றையும் ஒப்புக்கொண்டது. ஆகம வழிப்படி இதனைப் பின்பற்றியவர் மாஹேசுவரர் எனப்பட்டனர்"

(7) வீரசைவம்-திருமூலர் லிங்கபுராணத்தின் உட்பொருளை, விளக்கியுள்ளார்."a அது வீரசைவ முனிவர்களால் (வீரமாஹேஸ்வரர்) பெரிதும் மதிக்கப்படுவதாகும். அவர்களால் பெரிதும் மதிக்கப்படும் வீரம், வாதுளம் என்னும் இரண்டு ஆகமங்களையும் பாராட்டியுள்ளார். வீரமாஹேஸ்வரரின் சிறப்புக் கொள்கைகளில் ஒன்றான சட்ஸ்தல விவேசனம் என்பதன் அரிய பொருள்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்." எனவே, திருமூலர் காலத்தில் வீரசைவம் நாட்டில் இருந்தது என்பதை நன்கறியலாம். வீரசைவர் அல்லது வீரமாஹேஸ்வரர் அல்லது லிங்காயத்துகள் என்பவர் சிவனை மட்டுமே (லிங்கவடிவில்) வழிபடுவர். வீரசைவர் லிங்கத்தை மார்பில் தொங்கவிட்டிருப்பர். சிவசக்தி கடவுளாகவும் ஆன்மாவாகவும் பிரிந்துள்ளது. நெறி வழுவாது பக்தி செலுத்தலே சிவனை அடையும் வழி என்பது இவர்கள் நம்பிக்கை. இச்சமயத்தை முதலில் தோற்றுவித்தவர் துறவிகள் ஐவர். ஒவ்வொருவரும் ஒரு மடத்தின் தலைவராவர்.அம் மடங்கள் கேதாரம், பூரீ சைலம், பெலெஹல்தர், (மேற்கு மைசூரில் உள்ளது), உச்சைனி, காசி என்ற இடங்களில் இருந்தன.

வீரமாஹேஸ்வரர் வேதங்களை ஒப்புக்கொள்ளாதவர்; சாதி வேறுபாடுகள் இல்லாதவர்; குழந்தை மணம் செய்யாதவர்;