பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரம் متيقي 68

செயல்கள் பித்துடையர் செயல்களாகக் காணப்பட்டிருக்கும்; நாட்டில் விளக்கமும் மதிப்பும் பெற்றிரா. நாம் வேறு எந்த நூலைக்கொண்டும் உண்மை அறிந்திருக்க முடியாது. -

இந் நால்வருள் அசுத்த சைவர் வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தத்தை அறியாதவர். வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தம் சாதாரண சைவர் உபாயம் என்று திருமூலர் கூறுகிறார்." கடுஞ்சுத்த சைவர் எல்லாம் கடந்தவர். எனவே, சுத்த சைவரும் மார்க்க சைவருமே வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தத்தை அறிந்தவர் என்பதும், வேதாந்தத்துடன் கூடிய சைவ சித்தாந்தமே சுத்த சைவம் என்பதும் திருமூலர் கருத்தாதல் காண்க."

சரியை முதலிய நான்கு : சுத்த சைவர்கள் சரியை முதலிய நான்கையும் பின்பற்ற வேண்டும்; கோவில்களைக் கட்டி வழிபட வேண்டும்; பூசைகள் செய்ய வேண்டும்; உள்ளொளி கண்டு யோகத்தில் இருக்க வேண்டும்; தானே உள்ளொளியாதல் வேண்டும். இவை நால்வகைச் சரியைகள் ஆகும். திருமூலர் இவ்வாறே பிறவற்றையும் விளக்கிச் செல்கிறார்; ஆனால் இறுதியில் ஞானத்தை நன்றாக வற்புறுத்தியுள்ளார். "நாட்டில் ஞானத்தின் மிக்க அறநெறி இல்லை; ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று; ஞானத்தைக் கூறாதவை முத்தியளியா, ஞானம் இல்லாதவர் நகரத்திற்கு (நாட்டிற்கு?)த் தகுதியற்றவர்'." மூவகை தீகூைடிகள் : ஐந்தாம் தந்திரத்தில் சரியை முதலியன கூறுகையில் திருமூலர் மூவகைத் தீகூைடிகள் பற்றிக் கூறியுள்ளார். அவை: (1) சமய தீகூைடி, (2) விசேஷ தீகூைடி, (3) நிருவான தீகூைடி என்பன. சமய தீகூைடியால் ஒருவன், சைவ ஆசாரத்திற்கு உரியவனாகிறான்; விசேஷ தீகூைடியால் அவன் சிவபூசை முதலியவற்றுக்கும் யோக நெறிக்கும் சிவாகமம் ஓதுதற்கும் உரியவன் ஆகிறான்; நிருவான தீகூைடியால் சிவாகமங்களின் உண்மைப் பொருளை ஆராய்தற்கு அதிகாரியாவான்; அவ்வாராய்ச்சியால் சிவஞானம் விளங்கிச் சிறப்பியல்பு உணர்ந்து சிவம் பிரகாசித்து வீடுபேறு அடைவான். இம் மூன்று தீகூைடிகளின் விரிவினைச் சிவஞான போதப் பாயிர உரையிற் காண்க."

சன்மார்க்கம் முதலிய நான்கு : (1) சன்மார்க்கம் என்பது சிவன் திருவடிகளைக் காணல், தொழுதல், நினைத்தல், தொடுதல், புகழ்தல், தலையிலே சூடுதல் இவற்றைச் செய்பவர் முத்தியடைவர். அவர்கள் தத்சிவதத்துவத்தோற்றங்களான சுருதிச்சுடர்காண்பர். ஏனைய மூன்று மார்க்கங்கட்கும் இது மேலானதாகும்."(2) சகமார்க்கம் இறைவனையே நண்பனாகக் கொண்டு வழிபட்டு முத்தியடையும் வழி. (3) சத்புத்ர