பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ཆ་༥a:༔ 31

கட்டுவாங்கம் அரசப் பொருள்களில் ஒன்றாகக் கொடுக்கப்பட்டான். அவன் கொடியிலும் கட்டு வாங்கம் தீட்டப்பட்டிருந்தது.கட்டுவாங்கம் என்பது சிவனுக்குரிய ஆயுதங்களில் ஒன்று. அதன் உச்சியில் மண்டை ஒடுபொருத்தப்பட்டிருக்கும். அவ்வாயுதம் முன்கை அல்லது முன்கால் எலும்பைக்கொண்டு செய்யப்படுவது. கயிலாசநாதர் கோயில் சிற்பங்களிலும் இவ்வாயுதத்தைக் காணலாம். இவ்வாயுதம்பற்றி அப்பரும் தம்தேவராத்திற் குறித்துள்ளார்."

இனிப் பல்லவ வேந்தர்கள் செய்த சமயத் திருப்பணிகளைக் காண்போம்: -

மகேந்திரவர்மன் : இவனே தமிழகத்தில் மலைகளைக் குடைந்து கோயில்களாக்கிய கொற்றவன். இவன் குணபரன் முதலிய பட்டப் பெயர்கள் பல உடையவன். இவன் முதலிற் சமனனாயிருந்து, அப்பரைத் துன்புறுத்தியவன்; பிறகு சைவ சமயத்தின் சிறப்பை உணர்ந்து சைவனாக மாறியவன்; மாறிப் பாடலிபுரத்தில் (திருப்பாதிரிப்புலியூர்) இருந்த புகழ்பெற்ற சமண மடத்தையும் பாழிகளையும் இடித்து, அச்சிதைவுகளைக் கொண்டு திருவதிகையில் குணபரஈசுவரம் என்ற சிவன் கோயிலைக்கட்டியவன். மகேந்திரன் இங்ங்ணம் சமயம் மாறினவன் என்பதை அவனது திருச்சிராப்பள்ளிக் குகைக் கோயில் கல்வெட்டு உணர்த்துகிறது. இவன் வல்லம், தளவானுர், சீயமங்கலம், பல்லவபுரம், திருச்சிராப்பள்ளி என்னும் இடங்களில் சிவனுக்காகக் குகைக் கோயில்களையும், மண்டகப்பட்டில் திரிமூர்த்தி கோயிலையும் அமைத்தவன். ஒவ்வொரு கோயிலும் இப்பல்லவன் பெயருடன் ஈசுவரம் என்று முடியும். காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் இவன் ஒரு மண்டபம் கட்டியிருந்தான்." குண்டூர் மாவட்டத்து செசர்லா என்னும் ஊரில் உள்ள கடோதீஸ்வரர் கோயிலில், இவன் காலத்தில் கோயில் காரியங்களைக் கவனிக்க 12 பேர் இருந்தனர்" என்பதை நோக்க, கோயிலில் பல வேலைகளைக் கவனிக்கப் பலர் இருந்தனர் என்பதும், அவர்களை மேற்பார்க்க 12 பேர் இருந்தனர் என்பதும் தெளிவாகிறதன்றோ? இவன் காலத்தில் தோன்றிய வல்லம் குடைவரைக் கோயிலில் பிள்ளையார் இருக்கிறது. நாம் அறிந்த வரையில் தமிழகத்தில் இதுவே முதற் பிள்ளையார் என்று கூறலாம்."

மகேந்திரவர்மன் இசையில் பெரு விருப்புடையவன்; சிறந்த பயிற்சியுடையவன் என்பது திருமெய்யம், குடுமியான்மலைக் கல் வெட்டுக்களால் அறியலாம்." இசைப்பாக்களே என் செல்வமும் வாழ்வும்' என்றுதான் இயற்றிய மத்தவிலாசப் பிரஹசனத்தில் நடிகர்

ഞെക്ട1 - 6