பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ఇష్ట్రా 87

ஏகாலியரான திருக்குறிப்புத் தொண்டர் பூசித்த கோவில் என்று கூறப்படுகிறது." அதற்கேற்ப இக்கோயிலில் இன்றும் எகாலியரே தர்ம கர்த்தாவாக இருக்கின்றனர்; திருக்குறிப்புத்தொண்டர் உருவச் சிலையும் இருக்கின்றது." இக் கோயிலைக் கற்றளியாக்கியவள் தர்மமஹாதேவியாக இருத்தல் கூடும். அக் காலத்தில் இக் கோயிலில் 44 கூத்திகள் இருந்து இசையையும் நடனத்தையும் வளர்த்தனர்; பூசைக்கெனப் பிராமணர் மூவர் இருந்தனர். தட்டளி கொட்டுவார் இருவர், மந்திரம் சொல்வார் ஐவர், விளக்கும் தவசிகள் (கோயிலைத் தூய்மை செய்பவர்) 12 பேர், ஆக 64 பேர் இருந்தனர். இவர்கள் ஊதியத்திற்காக ஒரு கிராமத்தின் வருவாய் விடப்பட்டது. கோயில் ஆட்சியைத் தளியாள்வார் கவனித்து வந்தனர். இவர்கள் அனைவர்க்கும்தளிப்பரிவாரம் என்பது பெயர். சுவாமி பெயர் மாணிக்க ஈசுவரர்.' -

இரண்டாம் நந்திவர்மன் வெளியிட்ட உதயேந்திரம், கசாக்குடி, தண்டன் தோட்டம், கொற்றங்குடிப் பட்டயங்கள், அவன் காலத்தில் சதுர்வேதிகள், திரிவேதிகள், சோமயாஜிகள்,' பட்டர்கள், ஷடங்கவித்கள், ' க்ரம வித்தர் என்பவர்க்குத் தமிழகத்தில் புதிய ஊர்களும் நிலங்களும் அளிக்கப்பட்டன என்பதை உணர்த்துகின்றன." காஞ்சி வடமொழிக் கல்லூரியும் இருந்தது. சோளிங்கர் மலைமீதும் ஒரு கடிகா இருந்தது."a

தந்திவர்மன்: இவனும் வைணவன். இவன் காலத்தில் வயலகாவூர் - வாணாதிசுவரர் சிவன் கோயிலும், குடிமல்லம் பரசுராமேசுவரர் கோயிலும், கச்சித்திருமேற்றளியும் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பட்டுள." திருமேற்றளியில் ஒரு மடம் இருந்தது. அதற்கு முத்தரையன் ஒருவன் பொருள் உதவி செய்தான்." இது தந்திவர்மன் காலத்திற் புதிதாகக் கட்டப்பட்டதென்று கல்வெட்டுக் குறியாமையின், தந்திவர்மனுக்கு முற்பட்டது என்றே கொள்ளலாம். நாயன்மார் காலத்தில் மடங்கள் இருந்தன என்பதற்கு இது சிறந்த சான்றாகும். திருமேற்றளி அப்பர் சுந்தரராற் பாடப்பெற்றது.

மூன்றாம் நந்திவர்மன்: இவன் நந்திக் கலம்பகத்தில் குறிக்கப்பட்டவன், சிறந்த சிவபக்தன், தெள்ளாறு எறிந்த நந்திவர்மன், குமாரமார்த்தாண்டன், எனப் பல விருதுப் பெயர்கள் இவனுக்குண்டு. இவன் பொன்னேரிக் கடுத்த திருக்காட்டுப் பள்ளியில் புதிதாய்க் கட்டப்பட்ட சிவன் கோயிற்கு, அச் சிற்றுரையே தானமாக அளித்தான்; திருவதிகை வீரட்டானேசுவரர்க்குமுன் விளக்கெரிக்க 100 கழஞ்சு பொன் அளித்தான்: குமாரமார்த்தாண்டன் என்ற தன்