பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி =졸o S1

2. பல்லவர்கள் பாறைகளைக் குடைந்து கோயில்களை அமைத்தனர்; சிறிய குன்றுகளைக் கோயில்களாக மாற்றினார்கள்; பாறைகளை அடுக்கிக் கோயில்கள் கட்டினார்கள். இப்புதிய முறை பிற்காலச் சோழர் கோயில்கட்கு வழிகாட்டியாயின.

3. பல்லவ அரசர் பலர் சைவராக இருந்ததாலும் நாயன்மார் இக்காலத்தில் வாழ்ந்தமையாலும் தமிழ் நாட்டில் சைவசமயம் நன்கு பரவியது. ".

4. அரசர் - அரசமாதேவியர் - பொதுமக்கள் கோயில்கட்குப் பல அறங்கள் செய்தனர். அவற்றுள் பாடல்பெற்ற கோயில்களும் அடங்கும். 5. கோயில்களில் ஆகமங்களில் வல்ல சிவசாரியர்கள் அர்ச்சகராக இருந்தனர்; தட்டளி கொட்டுவார், மாலை கட்டுவார், ஆடுவார், பாடுவார் முதலிய கோயிற் பணியாளர் பலர் இருந்தனர். கோயில்கள் அமிர்தகணத்தார் அல்லது மடத்துப் பெருமக்கள் அல்லது ஊரவையார் ஆட்சியில் செவ்வனே பாதுகாக்கப்பட்டன. திருமேற்றளி போன்ற சில கோவில்களை அடுத்து மடங்களும் இருந்தன.

6. பல்லவ அரசர் இசை-நடன-ஒவிய-சிற்பக் கலை அறிவிற் சிறந்திருந்தனர். இசை, நடனக் கலைகளை வளர்க்கக் கோயில்களில் கூத்திகள் இருந்தனர். அவர்கள் கூத்திகள், அடிகள்மார், மாணிக்கத்தார் எனப் பெயர் பெற்றனர்.

7. திருவல்லம் கோவிலில் திருப்பதியம் ஓதப்பட்டது என்று கல்வெட்டுக் கூறுகிறது. கல்வெட்டுச் சான்று இன்மையால், பிற கோயில்களில் ஒதப்படவில்லை என்று கூறற்கில்லை. சில கோயில்களிலேனும் திருப்பதியம் ஒதப் பெற்றதெனக் கொள்ளலாம்.

8. இக்காலப் பல்லவர் சிறந்த வடமொழிப் புலவர்கள். அவர்கள் ஆட்சியில் வேதம் முதலிய வடமொழி நூல்களில் வல்ல பிராமணர்கள் ஊர்களையும் நிலங்களையும் பெற்றனர். காஞ்சி, சோளிங்கர், பாகூர் முதலிய இடங்களில் வடமொழிக் கல்லூரிகள் பல்லவர்களால் ஆதரிக்கப்பட்டன.