பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பிற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம் - II

நெடுகக் கோயில்கள், மடங்கள் இருந்தமையையும் அறியலாம்." இவ்வாறே காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து உறையூர்வரை கோவலன் கண்ணகி சென்றபொழுது பல சிவன் கோயில்கள் வழியில் இருந்தனவென்று இளங்கோவடிகள் கூறவில்லை. ஆயின், அப்பர்-சம்பந்தர் காலத்தில் அவ்வழி நெடுக ஏறக்குறைய ஐந்து மைலுக்கொரு சிவன் கோயில் இருந்ததை அறிகிறோம். தொகை நூல்களிற் கூறப்படாத பல கோயில்கள் முற்காலப் பல்லவர் காலத்தில் தோன்றிய கபிலதேவர்-பரணதேவர்-ஐயடிகள் முதலியோர் பாடல்களிலிருந்து அறிகின்றோம். கி.பி.7-ஆம் நூற்றாண்டில் ஏறத்தாழ 325 கோயில்கள் தமிழகத்தில் இருந்தன என்பதைத் திருமுறைகளைக் கொண்டு அறிகின்றோம். இக்கோயில்களின் பெருக்கம் சைவசமய வளர்ச்சியைப் படிப்படியாக உணர்த்துகிறதன்றோ?

இக்கால நாயன்மார்: சுந்தரர் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில் 63 நாயன்மார்களைப் பற்றியும் 9 தொகை அடியார்களைப் பற்றியும் கூறியுள்ளார் இந்த நாயன்மார்கள் ஒரு காலத்தார் அல்லர், ஒரு சாதியார் அல்லர். ஒரு நாட்டார் அல்லர், கி.பி.300 முதல் கி.பி.900 வரையிலும் இருந்தவராவர்; வடக்கே காம்பீலி முதல் தெற்கே குமரி வரை வாழ்ந்தவராவர். இவருள் அப்பர் சம்பந்தருக்கு முற்பட்டவர் 17 பேர் என்பது முன்னரே கூறப்பட்டது. அப்பர், சம்பந்தர் காலத்தவர் என்று திருமுறைகள் கொண்டும் பெரியபுராணம் கொண்டும் கணிக்கத் தக்கவர் 11 பேர். அவராவார் (1) அப்பர், (2) சம்பந்தர், (3) அப்பூதியடிகள், (4) முருக நாயனார், (5) சிறுத்தொண்டர், (6) நீலநக்கர், (7) குலச்சிறையார், (8) மங்கையர்க்கரசியார், (9) நெடுமாறர், (10) குங்குலியக்கலயர், (11) திருநீலகண்ட யாழ்ப்பானர். சுந்தரர் காலத்தில் வாழ்ந்தவர்கள் 13 பேர். அவராவார் (1) சுந்தரர், (2) அவர் தந்தையார் சடையனார், (3) தாயார் இசை ஞானியார். (4) அவரை வளர்த்த நரசிங்க முனையரையர், (5) அவரைத் தொகை பாடத்தூண்டிய விறல் மிண்டர், (6) அவருடன் யாத்திரை செய்த சேரமான் பெருமாள், (7) அவர் நண்பரான கலிக்காமர், (8) கலிக்காமர் மாமனாரான மானக்கஞ்சாறர், (9) கோட்புலியார், (10) பெருமிழலைக் குறும்பர், (11) சோமாசிமாறர், (12) கழற்சிங்கர், (13) செருத்துணை நாயனார். இதுவரைகூறிய 41 பேர்போக எஞ்சிய 22 பேரும், வேறுதக்க சான்றுகள் கிடைக்கும் வரை, அப்பர்-சம்பந்தர்க்கும் சுந்தரர்க்கும் இடைப்பட்ட காலத்தவர் எனக்கொள்ளலாம்." - அரசரான நாயன்மார்: நாயன்மார் அறுபத்து மூவருள் (1) சேரமான் பெருமாள் சேரமன்னர்; (2) கோச்செங்கணானும் புகழ்ச் சோழரும் சோழ மன்னர்; (3) நெடுமாறர் பாண்டிய மன்னர்: