பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் i i 5 என்ற ஞானசம்பந்தப் பெருமானின் திருமொழியும் எழுந்தது. இவ்வெடுத்துக்காட்டுகளால் இறைவனைச் சொல்லொணாத பொருள்' என்றோ, ஐயத்திற்குரிய பொருள் என்றோ கருதி மயங்குதல் கூடாது என்பதையும் அறிந்து தெளிக. இறைவனை மன வாக்குகளைக் கடந்தவன்' என்று கூறுவதிலும் உண்மைப் பொருள் உண்டு. மனம்’ என்பது பசு ஞானத்தையும் வாக்கு’ என்பது பாச ஞானத்தையும் குறிக்கும் என்பதையும் உணர்வாயாக. இந்த இரண்டுவித ஞானங்களாலும் இறைவனது சொரூப நிலையை அறிதல் இயலாது. ஆகவே, இவ்வகை யில் இறைவன் உயிர்களால் அறியக் கூடாதவனாகின்றான். இங்ங்ணம் எவ்வகையிலும் யாரும் எப்பொழுதும் அறியாத பொருள் ஒன்று உள்ளது என்று கூறினால் அஃது உள்ளது எனக் கோடலே ஐயப்பாடாய் விடும். அதனால் பயன் விளைதலும் இயலாது. எடுத்துக்காட்டாக ஆமை மயிரா லான கம்பளியும், ஆகாயப்பூவாலான மாலையும் உள்ளன எனக் கூறின், அவற்றை யாவரே அறிய வல்லார்? அறிந்து பயன் கொள்வோர் யாவர்? உணராத பொருள்சத் தென்னின் ஒருபயன் இல்லை; தானும் புணராது; காமும் சென்று பொருந்துவ தின்றாம் என்றும்; தனவாத கருமம் ஒன்றும் தருவதும் இல்லை; வானத் தினரார்பூந் தொடையும் யாமைக் கெழுமயிர்க் கயிறும் போலும்.ே என்பது சிவஞான சித்தியாரின் திருமொழி. இங்ஙனமே இறைவன் ஒரு காலத்தும் ஒருவராலும் அறியப்படான் 102. சித்தியார். 8.4