பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய விளக்கு கள்வன் எனக் கருதப்பெற்றுக் கொல்லப் பெறுகின்றான். முப்பிறப்பிலே அவன் களவு செய்யாத ஒருவனைக் கள்வன் எனக் கூறிக் கொல்வித்தவன். அத்திவினையின் பல னையே இப்பிறப்பில் அவன் அநுபவிக்கின்றான். கன்மம் என்பதும் ஊழ் என்பதும் இதுவேயாகும். சோதிடத்தில் சில நிகழ்ச்சிகள் முன்னரே அறிந்து சொல்லப் பெறுவதை நீ அறிவாய். பெரும்பாலும் அவை அங்ங்ணமே நிகழ்தல் பலரது அநுபவமாகும். என் வாழ் விலும் பெரும்பாலானவை அவ்வாறு நிகழ்தலைக் கண்டுள் ளேன். சிறுபான்மைச் செயல்கள் தவறி விடுதலும் உண்டு, அங்ங்னம் தவறுவதற்குச் சொல்லும் முறையில் உண்டாகும் தவறே காரணமாகும். ஆகவே, ஒவ்வொருவரது வாழ்வி லும் நடைபெறும் இன்ப துன்ப அநுபவங்களாகிய நிகழ்ச்சி கள் யாவும் ஒரு மன்றத்தில் முன்னரே அமைக்கப்பெற்ற நிகழ்ச்சி நிரலின்படி நிகழ்வதுபோல நிகழ்ந்து வருதல் என்பது தெளிவு. கைகேயியின் கூடாத செயலுக்குச் சிற்றம் கொண்டு வெகுண்டு எழுந்த இலக்குவனை நோக்கி எல்லாம் விதியின் பிழை என்று அமைதி கூறுவான் இராமன்." - - பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும் ஆறும்முன் கருவுட் பட்டது; அவ்விதி அது வத்தால் ஏறிடும்" என்று கன்மத்தை விளக்குவார் அருணந்தி சிவாச்சாரியார். இக்கடிதத்தில் கூறிய பல செய்திகளைக் கொண்டு வினை என்னும் கன்ம மலம் உண்டு என்பதை நினைவில் இருத்துக. =కి 3 Liథā", கார்த்திகேயன். 26. கம்ப. அயோத்தி. நகர் நீங்கு-134 7ே, சித்தியார். 2.9