பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

名2岔 சைவ சமய விளக்கு விருத்தி என்றும், அசுத்த மாயையின் காரியம் பரிணாமம்’ என்றும் கூறும். பால் தயிராதல் பூரண பரிணாமம்; வெண் ணெய்த்திரளுதல்,சாணம் புழுவாதல் ஏகதேசப் பரிணாமம்.' சைவசித் தாத்தம் அசுத்த மாயைக்குக் கூறும் பரிணாமம் ஏகதேசப் பரிணாமம் என்று அறிக. உலகம் சொல் உலகம், பொருள் உலகம் என இருவகை யாய் உள்ளது. சொல் உலகத்தை சத்தப் பிரபஞ்சம்' என்றும், பொருள் உலகத்தை "அர்த்தப் பிரபஞ்சம்’ என்றும் கூறுவர், இவற்றுள் சொல் உலகம் எழுத்துக்களை உறுப் பாகக் கொண்ட சொற்களும், சொற்றொடர்களுமாகும். எழுத்துக்கள் வன்னம்’ (வர்ணம்) என்றும், சொற்கள் பதம் என்றும் வடமொழிப் பெயர்களைப் பெறும். சொற்முெடர் களில் சிறப்புடையன மந்திரங்களாகும். அதனால் மந்திரம், பதம், வன்னம் என்று சத்தப் பிரபஞ்சத்தை மூவகைப் படுத்திப் பேசுவர். வடமொழி மரபும் சைவ மரபும் பற்றி வன்னம் ஐம்பத் தொன்று என்றும், பதம் எண்பத்தொன்று என்றும், மந்திரம் பதினொன்று என்றும் சிவாக மங்கள் வரையறை செய்கின்றன. இவண் கூறப்பெற்ற எழுத்து. சொல், சொற்றொடர்களில் எல்லா மொழிகளிலுமுள்ள எழுத்துக்களும் சொற்களும் நூல்களும் அடங்கும் என்பது சிவாகமங்களின் கொள்கையாகும். சத்தப்பிரபஞ்சம் அறிவுக்குக் காரணமாய் நிற்றலின் அது கத்த மாயையின் காரியமேயாகும். ஆகவே, சுத்த மாயையின் காரியமே சொற் பிரபஞ்சம், பொருட்பிர பஞ்சம் என்று இருவகையாகின்றது என்பதை அறிக. அசுத்தமாயையின் காரியங்களும் பிரகிருதி மாயையின் காரியங்களுக் பொருட் பிரபஞ்சம் ஒன்றேயாதல் என்பதையும் அறிந்து தெளிக. - சொற்பிரபஞ்சமே, வாக்கு’ எனப்படும். அது சூக்குமை, பைசந்தி, மத்தினம், வைகரி என நான்கு வகை யாகும். இவை நான்கும் ஒன்றின் ஒன்று துரல் மாய் வளர்ச்சி புற்று நிற்கும். எனவே, சூக்குமை முதலாகக் கூறுதல்