பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 சைவ சமய விளக்கு வாக்கள்’ எனப்படும். அத்துவா என்பதற்குப் படிவழி, என்பது பொருள். இவை ஆறும் ஆன்மா மேலேறுதற்குப் படிவழிபோல் இருத்தலின் அத்துவா’ எனப்பெயர் பெற்றன என்பதை அறிக. - . . * சைவாகம முறைப்படி மந்திரம் பதினொன்று. அவை பஞ்ச பிரமமந்திரங்களும், ஷடங்க மந்திரங்களுமாகும். பதம் எண்பத்தொன்று என்று சொல்லப்படுகின்றன. வன்னம் (எழுத்து) வடமொழியில் உள்ள ஐம்பத்தொன் றாகும். புவனம் இருதுசற்றிருபத்து நான்கு தத்துவம் முப்பத்தாறு. கலை ஐந்து, இவற்றுள் கலைகளில் மற்றவை அடங்கி நிற்கும். இவ்விவரங்களையும் நீ அறிதல் வேண்டும். . - * ... . மேற்குறிப்பிட்ட ஆறனுள் மந்திரம், பதம், வன்னம் என்ற மூன்றும் சொற் பிரபஞ்சங்கள், ஏனைய புவனம். தத்துவம், கலை என்ற மூன்றும் பொருட் பிரபஞ்சங்கள், இந்த ஆறனையும் முறையே நன்கு உணர்ந்து ஒவ்வொன் நாகல் கர்ைந்து சென்றால் இறைவனை அடையலாம். ஆறு அத்துவாக்களுள் மந்திரம் முதலியவை ஒன்றில் ஒன்று அடங்க, இறுதியில் எல்லாம் பஞ்ச கலைகளுள் அடங்கி நிற்றலைத் தெளியலாம். இதனால் நிருவான திக்கையில் ஆன்மாவைத் தூய்மை செய்யும் ஆசாரியர் செய்யும் அத்துவா சோதனையை கலாசோதனை என்று வழங்குவர். - . . . . இனி, மற்றை அதிதுவாக்கள் கலைகளில் அடங்கி நிற்கும் முறையை விளக்குவேன். இந்நிலையில் தத்து வங்களும் அவற்றின் காரியங்களாகிய தனு, கரண, புவன, போகங்களும் பொருட் பிரபஞ்சம் என்றும், மந்திரம், பதம் வன்னம் என்பன சொற்பிரபஞ்சம் என்றும் முன்னர்க் கூறியதை ஈண்டு நினைவுகூர்தல் வேண்டும். விெர்த்தி கலை ஆன்மதத்துவம் இருபத்து - நான்கில் விருதிவி தத்துவம் ஒன்று மட்டும் இதில் அடங்கும். பதங்.