பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺爵本 சைவ சமய விளக்கு மூலம் ஆகிய மூன்று மந்திரங்களும் இக்கலையில் அடங்கி நிற்கும், இக்கலைக்குரிய வாக்கு சூக்குமை (நேத்திரத் திற்கு ஈடாக மூலம் உள்ளது). எனவே, சுத்தம், மிச்சிரம், அசுத்தம் என்னும் முத்திறப்பட்ட எல்லாப் பொருள் களும் இந்த ஐந்து கலைகளுள் அடங்குதலை அறிந்து தெளிக. தத்தலங்கள் பலவற்றில் யாவர்க்கும் எளிதில் விளங்கு வன பஞ்ச பூதங்கள். இதனால்தான், கிலம்.தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம்" எனக் கூறினார் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர். வள்ளுவப் பெருந்தகையும், சுவையொளி ஊறோசை காற்றம் என்றைந்தின் வகைதேரிவான் கட்டே உலகு" என்று கூறிப் போந்தார். எனினும், காலம் உலகம் உடம்பே உயிரே பால்வரை தெய்வம் வினையே பூதம் நிலனே காலம் கருவி என்றா" என்றற்றொடக்கத்தனவாகத் தொல்காப்பியரும், வலியறி தல், இடனறிதல் என்பவற்றோடு கால மறிதல் என்பதை பும்,விதித்தமை முதலியவற்றாலும், வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தாற்கும் துய்த்தல் ஆரிது." என்பது முதலியவற்றாலும் திருவள்ளுவப் பெருமானும் காலத்தையும் இத்ஆ, உடன்பட்டுக் கூறினார் 7