பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 3 of

  • தத்துவம்’ என்ற வடசொல் தமிழில் உண்மை’ எனப் பொருள்படும் தத்துவ ஆராய்ச்சி என்பது பொருள்களின் உண்மை நிலையை அளவை முறையால் ஆராய்ந்துணர்தி லாகும். ஒவ்வொரு சமயமும் தன் தன் கொள்கையே உண்மை என்பதை தத்துவ நூல் வழியாகவே விளக்கு கின்றது. 656 சமயம் தன்து கொள்கையை அவ்வாறு விளக்கும் பகுதிகை சைவாகமங்கள் “ஞானபாதம்’ என்று பிரித்துக் காட்டும். இங்ஙனம் பற்பல நூல்களின் சித்தாந்த உண்மைகள் விளக்கப்பட்டிருந்தும் பலர் இவ் வுண்மையை உணராது உள்ளனர். இதற்குக் காரணம் என்ன? கூறுவேன்! 'பரிபாகம் இன்மையே காரணம் என்று கருதலாம். 'பரிபாகம்’ என்பது ஆணவ மலம் தனது ஆற்றல் கெட்டு நீங்கும் நிலையை அடைதலாகும். அஃது ஏற்படுங் காலத்தில் சத்தி நிபாதமும், அதுவழியாகச் சகியை முதலிய தவங்களும் நிகழும். அத்தவ முயற்சியால் இரு வினையொப்பு உளதாகி உலக மயக்கம் நீங்கும். நீங்கவே, சிவஞானம் கைகூடும்.

மலபரியாகம், சத்தி நிபாதம், இருவினை கொப்பு என்பன தாமே இயற்கையாய் நிகழ்தல் போலத் தவமும் ஞானமும் ஒருவர்க்குத் தாமே நிகழ்வதில்லை என்பதை யும் அவை குருவருளால்தான் நிகழும் என்பதையும் நீ அறிதல் வேண்டும். பசிகள் வாங்கச் சென்ற திருவாத ஆரரை இறைவனே குருவாக வந்து, திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட நிகழ்ச்சியையும், திரிசிரபுரத்தில் தாயுமான அடிகளை மூலன் மரபில் வந்த மெளன குரு தம் அடிய ராக ஏற்ற நிகழ்ச்சியையும் ஈண்டு நீ நினைவு கூர்வாயாக, மலபரியாகமும், சத்தி நிபாதமும் வந்த காலத்தில் தவத்தைச் செய்யத்தக்க நிலையும், ஞானத்தை உணரத் தக்க நிலையும் வாய்க்குமேயன்றித் தவமும் ஞானமும் தாமே வந்து விட மாட்ட என்பதை நீ அறிதல் வேண்டும். இதனைச் சில உவமைகளால் விளக்குவேன். நோய் உள்ள போது நோயாளி பயிேன்மையால் உணவை உட்