பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சைவ சமய விளக்கு களைக் கொண்டு குறைவில்லாத பரிபூரணமான பொருளும் உண்டு என மெய்ப்பிப்பது. இக்கூறிய மூன்றாவதை யோக மதத்தினர் (பதஞ்சலி மதம்) கைக்கொள்ளு கின்றனர். காண்ட் போன்ற புகழ்பெற்ற மேலை நாட்டு மெய்ப்பொருளியல் அறிஞர்கள் இதனையே கைகொள்ளு கின்றனர். ஆயினும், சைவ சித்தாந்திகள் இதனைக் கையாளவில்லை. இவர்கள் முதலாவது காரணத்தையே அதிகமாக மேற்கொள்ளுகின்றனர் என்பதை அறிக. பாயிர இயலில் சற்காரிய வாதம்” என்ற ஒரு கொள்கையைக் குறிப்பிட்டேன் அல்லவா? ஒவ்வொரு காரியத்திற்கும் காரணம் இருந்தேயாக வேண்டும் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வர். இதற்கு மேலும் ஒரு படி சென்று காரண நிலையிலும் காரியம் உண்டு என்பதை மெய்ப்பிக்கலாம். காரியம் எங்கிருந்தோ திடீரென்று புதிதாகத் தோன்றுவது அல்ல. அஃது உற்பத் திக்கு முன்னரும் உள்ளது. இதுவே சற்கனரிய வாதம்'. இதனைத் தெளிவாக்குவது இன்றியமையாததாகின்றது. காணப்பட்ட உலகம் இதற்கு முன் ஒடுங்கிய நிலையில் காணப்படாத துண் (சூக்கும) நிலையில் இருந்தது. பின்னர் காணப்படும் ப்ரு (துரல) நிலையை அடைந்துள்ளது. இனி, முன்போலவே ஒடுங்கி நுண்ணிலையை அடையும். ஆகவே ‘உலகம் என்றும், யாதேனும் ஒரு நிலையில் உள்ளதே யின்றி, இல்லாது ஒழிவதில்லை என்பது புலனாகும். இதனை மேலும் தெளிவாக்குவேன். காணப்படாத நுண்ணிலையில் இருந்த உலகம் காணப்படும் பரு நிலையை அடையும்பொழுதுதான் பயன் உண்டு. ー劉söfra) 9. இயல்.t; கடிதம்-1, பக். 4. 10. காரியங்கள் பலவும், தோற்றத்திற்கு முன்னும் தத்தம் காரணங்களில் உள்ளனவே?-என்பது சற்காரிய வாதம். சத்உள்ளது; சற்காரியம்-உள்ளதாகிய காரியம். இல்லது தோன்றும் கன்பவர் அசற்காரிய வாதிகள் ஆவர். -