பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 1 (பதி) 85 நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண் ஞானப் பெருங்கடற்கோர்நாவாய் அன்ன பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண் புரிசடைமேல் புனலேற்ற புனிதன் தான்காண்" என்ற நாவுக்கரசரின் திருத்தாண்டகப் பகுதியில் நாரணன், நான்முகன், நால்வேதன் என்பன அருளிச் செய்யுமிடத்து ‘புரிசடைமேல் புனல் ஏற்ற புனிதன்தான் காண்’ என்று அருளினமையின் அச்சிறப்புபற்றி முன்னர்வந்த நாரணன், நான்முகன்’ என்பன சம்புபட்சத்தைக் குறிக்கின்றன என்பதை அறிந்து தெளியலாம். இன்னும், சுருதிவா னவனாம் திருநெடு மாலாம் சுந்தர விசும்பில்இந் திரனாம் பருதிவா னவனாம் படர்சடை முக்கட் பகவனாம் அகவுயிர்க் கமுதாம் எருதுவா கனனாம் எயில்கள்மூன் றெரித்த ஏறுசே வகனுமாம் பின்னும் கருதுவார் கருதும் உருவமாம் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே" என்ற கருவூர்த் தேவர் திருப்பாடலில் அயன், மால், இந்திரன் முதலிய பெயர்கள் எருதுவாகனனாம் எயில்கள் மூன்றெரித்த ஏறுசேவகனுமாம் என்று அருளிச் செய்துள்ள மையின் சம்புபட்சத்தையே குறிக்கின்றமையைத் தெளியலாம். 'கருதுவார் கருதும் ചന്ദ്രഖഥ് என்றதனால் யாவராயினும் யாதானும் ஒராற்றால் யாதானும் ஒரு தெய்வத்தை நின்ைந்து : வழிபடினும் அத்தெய்வ வடிவமாயும் சிவபெருமான் நிற்பன் என்று உணர்த்தப் பெற்றமையையும் சிந்தித்து நன்கு உணரலாம். இதனை, - 5 அம். தேவா 6.8:3 56. திருவிசைப்பா 3; 5