பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 87 உயிர்களும்-சம்புபட்சம் போலவே நவபேதங்களை அடை யுமோ என்ற ஐயம் எழலாம். அணுக்களாகிய உயிரினத்தவர் தம் புண்ணிய விசேடத்தால் அயன் மால் என்ற நிலைக்கு மேல் செல்லுதல் இல்லை என்பர். "அயன், மால்' என்பவ ரோடு உயிரினத்தவராகவும் ஆதல் உண்டு என்பவர் வேறு சிலர். நவந்தரு பேதங்களிலும் உயிர்கள் நிற்றல் உண்டு என்பவர் இன்னும் சிலர். இவர்கட்கு இடையில் ஒரு சாரார் ‘நவந்தரு பேதங்கள் என்று சொல்லப்படுகின்ற அவை அனைத்தும் அனுபட்சமேயன்றி ஒன்றேனும் சம்புபட்சம் அன்று என்பர். இறைவனது தடத்த நிலையும் அது பற்றி வரும் மூவகைத் திருமேனிகள் முதலியனவும் உளவென்றல் கூடாததாய் முடியுமாகலின் இவர்கள் கூற்றுகள் எவ்வகையி லும் பொருந்துமாறில்லை. - . முக்கியமான கருத்து உயிர்கள் தம்முடைய தாழ்நிலை யினின்றும் படிமுறையால் உயர்நிலை அடைந்து முடிவில் சிவ மேயாய் நிற்கும் என்பது சைவ சித்தாந்திகள் எல்லோர்க்கும் உடன்பாடாகும். எல்லாவற்றிற்கும் மேலான பரசிவ நிலையை அடைதற்குரிய உயிர் அச்சிவத்தின் தடத்த நிலைகளாகிய நவந்தரு பேதங்களிலும் நிற்கும் என்பதனால் வரும் குற்றம் ஒன்றும் இல்லை. ஆகவே நவம்தரும் பேதங்கள் சம்புபட்சத் திலும் உண்டு அனுபட்சத்திலும் உண்டு என்பது உண்மையே யாகும். ஆயினும் தடத்த நிலையில் அதிகாரம் அல்லது தலைமைப்பாடு என்பது- அஃதாவது உலகத்தைச் செயற்படுத் தும் நிலை- மகேசுரனுக்குமேல் இல்லாமையால் அனுபட்ச பேதங்கள் மகேசுரனுக்குமேல் இல்லை என்று சொல்லப் படும். இந்த நுணுக்கத்தை உளங்கொள்ளல் வேண்டும். மேலும், இறைவன் உயிர்களோடு உடனாய் நின்று எல்லாவகையிலும் உதவுதல் அவனது தடத்த நிலையாதலால் மகேசுவரனுக்குக்கீழ் சம்புபட்சம் இல்லை என்றலும் கூடாத