பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம ததே ஆகும். ஆயினும், உலகத்தைத் தோற்றுவித்தல் நிலை நிறுத்தல் ஆகிய இரண்டு செயல்களும் ஒடுங்குதல் தொழிலுள் அகப்பட்டு நிற்றலால் இவற்றுக்குரிய அயன் மால்களின் வடிவம் முதலியன அணுபட்சத்திற்கே உரியன எனவும் ஒடுக்கம் முதலிய தொழில்கட்குரிய மகேசுரன் முதலியோரது வடிவம் முதலிய சம்புபட்சத்திற்கே உரியன எனவும் பாகுபாடு செய்யப்பட்டமையின் மகேசுரனுக்குக்கீழ் சம்பு பட்சம் இல்லை எனவும் கூறப்படும் என்பதை அறிந்து தெளியலாம். எனவே, மகேசுரனுக்கு மேல் செல்லும் உயிர்கள் இந்நிலை யில் உண்டாகும் இன்பங்களை மகிழ்ந்து நுகருமேயன்றி உலகத்தைச் செயற்படுத்தல் இல்லை; மகேசுரனுக்குக் கீழ்வரும் சம்பு பட்சங்களது உண்மை தத்துவ உணர்வு கைவரப்பெற்றோருக்கு அன்றி ஏனையோரால் உணர்தல் இயலாது. இந்நுண்ணிய கருத்தே மேற்குறிப்பிட்ட கூற்றிற்குப் பொருளாகும் என்பதைச் சிந்தித்து உணரலாகும். இவ்வாறாக, இறைவன் உலகத்தைச் செயற்படுத்துதல் தானே செய்தல், பிறர் வாயிலாகச் செய்வித்தல் என்ற இரு வகையில் நடைபெறும் என்பதும், இவற்றுள் தானே செய்தல் எவ்விடத்தும் உளது என்பதும், பிறர்வாயிலாகச் செய்வித்தல் அதை அவன் விரும்பிய வழி மகேசுவரனுக்குக் கீழ் அனந்தர் உருத்திரர் முதலியவரிடத்தே நிகழும் என்பதும் அறிந் தவையே. இச் செய்வித்தல், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி' என்ற மூன்று நிலைகளில் வைகரி, மத்திமை என்ற வாக்குகளிலும் காலம், கலை முதலிய முப்பத்தொரு தத்துவங் களிலும் நடைபெறுவதாகும் செய்தல்' என்பது அதீதம் முதலிய ஐந்து நிலைகள், சூக்குமை முதலிய நான்கு வகை வாக்குகள் சிவதத்துவம் முதலிய முப்பத்தாறு தத்துவங்கள் ஆகிய அனைத்திலும் திகழ்வதாகும். இவை யாவும் தத்துவங்