பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் மாசுடை உலகத்திலும் தூய உலகம் உண்டு என்பதையும் தூய உலகத்தில் மாசடை உலகம் இல்லை என்பதையும் நாம் தெளிந்துள்ளோம். ஆகவே, மாசுடை உலகிலும் இறைவன் சுத்த தத்துவத்தில் தனது சக்தியால் திருமேனி கொண்டு நிற்பான். ஆதலின் மாசடை உலகில் அவனைக் காண்டலும் அவனை அணுகி நிற்றலும் கூடா என்பதில்லை. இதனால் அறுபான் மூன்று நாயன்மார்கட்கும் ஆளுடைய அடிகள், நம்பியாரூரர்க்கும் வெளிநின்றருளியவன் பரமசிவனேயன்றி உருத்திரர் அல்லர் என்பதையும் அறிய முடிகின்றது. அவர் கள் யாவரும் பெற்றது தூய உலகப்பேறேயன்றி மாசுடை உலகப் பேறன்று என்பதையும் உணர்ந்து தெளியலாம். மேலும், இதனாலேயே இறைவன் உலகப் பெருநலத்தின்பொருட்டு நிகழ்த்திய வேகம், போகம், யோகம் என்ற முத்திறத்து நிகழ்ச்சிகளாகத் திருவிளையாடற்புராணம், பெரியபுராணம் போன்ற புராணங்கள் நுவலும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பரமசிவனுடையனவேயன்றி உருத்திரனுடையன அல்ல என்பதையும் அறிகின்றோம். மற்று, ஒரோ ஓரிடத்து ஒரோ வொரு காலத்து ஒரே ஒருவர் பொருட்டு நிகழ்ந்த நிகழ்ச்சி களே உருத்திரனுடையன என்பதையும் தெரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். திருமுறைகளிலும் சிவாகமப் பொருள் களை வடித்தெடுத்துக் காட்டும் சிவஞானசித்தியாரிலும் இவை தெரிவிக்கப் பெற்றுள்ளன என்பதையும் சிந்தித்து உணர்தல் வேண்டும். - (11) சிவக்குமாரர்கள்-சிவகணங்கள் இவர்களைப் பற்றியும் சிறிது விளக்கம் காண்போம். உலகில் ஒருவருக்கு யாதொரு தலைமைப் பதவி வருவது இறைவனது திருவருளால்தான் என்பதை நாம் உணர்தல் வேண்டும். தலைமையைத் தரும் திருவருள் அதிகார சக்தி'